twitter
    Tamil»Movies»Ghajinikanth»Critics Review

    விமர்சகர்கள் கருத்து

    • ஹர ஹர மகாதேவகி, இருட்டு அறையில் முரட்டுகுத்துனு தன்னோட முந்தைய இரண்டு படங்களையும் அடல்ட் காமெடி படமா கொடுத்து கெட்ட பேர சம்பாதிச்ச சந்தோஷ், தன்னாலயும் பேமிலி என்டர்டெயினர் படம் எடுக்க முடியும்னு நிரூபிக்கிறத்துக்காகவே இந்த படத்த இயக்கி இருக்கார். அவரோட முயற்சி வீண் போலக. கஜினிகாந்த் ஒரு முழுமையான பேமிலி என்டர்டெயினர் படம் தான்.

      படம் ஆரம்பிக்கிறதுல இருந்து முடியுற வரைக்கும் காமெடி சரவெடி தான். பாஸ் என்கிற பாஸ்கரன், ராஜா ராணி படங்களுக்கு பிறகு ஆர்யாவுக்கு முக்கியமான படமான கஜினிகாந்த் இருக்கும். நடுவுல கொஞ்சம் டல்லடிச்ச ஆர்யாவோட மார்கெட்ட பிசியாக்க கஜினிகாந்த் உதவியிருக்கு. எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சியில கிடைச்ச உற்சாகம் திரையில் தெரியுது பிரதர்.

      படத்துல சதீஷோட காமெடி பஞ்ச் எல்லாமே அப்ளாஸ் அள்ளுது. ஆர்யாவ கலாய்க்கிறதுல சந்தானத்துக்கு நான் சலைத்தவன் இல்லன்னு காட்டியிருக்கார். கருணாகரன், மொட்ட ராஜேந்திரன், நரேன், உமா பத்மாநாபன், சம்பத், சாயிஷா, மதுமிதானு எல்லோரையுமே காமெடி பண்ண வெச்சிருக்கார் இயக்குனர்.

      ஹர ஹர மகாதேவகி, இருட்டு அறையில் முரட்டுகுத்து, கஜினிகாந்த்னு, இயக்குனர் சந்தோஷோட ஃபேவரைட் இசையமைப்பாளரா இருக்கிறவர் பாலமுரளி பாலு. வெரைட்டியான நம்பர்ஸ்ல தாளம் போட வெச்சிருக்காரு. ஹோலா ஹோலா பாட்டும், பார் சாங்கும் ஒரு கொண்டாட்டமான ஃபீல் கொடுக்குது. அதே நேரத்துல ஆரியனே பாட்டு செம மெலடி. அங்கங்க சின்ன சின்ன பிட்ஸ்சா ஒலிக்கிற கருகரு விழிகள் காதுக்குள்ள இனிமையா ரீங்காரமிடுது. பின்னணி இசைக்கு பெரிய ஸ்கோப் இல்லைனாலும் நிறைய டீடெயிலிங் செஞ்சிருக்காரு. சபாஷ் பாலமுரளி பாலு.

      படத்தில் ஆர்யா பலமுறை டைவர்ட் ஆனாலும், காமெடியில் இருந்து டைவர்ட் ஆகாமல் பயணிக்குது கதை. அதனால நீங்களும் தியேட்டருக்கு போய் கஜினிகாந்த் பார்த்து, மன அழுத்தத்தில் இருந்து 'டேக் டைவர்ஷன்' ஆகலாம். சிரிக்க மறந்துடாதீங்க.