விமர்சகர்கள் கருத்து

    • சீரியஸாக புதையலைத் தேடும் கதை என்றாலும் படம் முழுக்க காமெடிதான். பாட்ஷா காட்சியை ஸ்பூஃப் ஆக்கும் மன்சூர் அலிகான் - யோகிபாபு, அம்மா சென்டிமென்ட் ஸ்பூஃஃப் செய்யும் மொட்டை ராஜேந்திரன், ஆதரவற்ற குழந்தைகளை வளர்ப்பதாக கதையைக் கட்டும் ரேவதி, கொஞ்சமே கொஞ்சம் வில்லத்தனம் இருந்தாலும் எதைச் சொன்னாலும் நம்பும் அப்பாவி முனீஸ்காந்தின் பாவமான ரியாக்‌ஷன்ஸ் என படம் முழுக்க சிரிப்புக்கு குறையில்லை. விவேக் - மெர்வின் இசையில் 'குலேபா' பாடல் கவனம் ஈர்க்கிறது. பிரபுதேவாவின் டான்ஸ் பற்றிச் சொல்லவா ஏண்டும்? ஆனந்தகுமாரின் ஒளிப்பதிவில் குறையொன்றுமில்லை. 'சேராமல் போனால்' பாடலின் விஷுவல்ஸ் ரசிக்க வைக்கிறது. விஜய் வேல்குட்டியின் எடிட்டிங்கில் படத்தின் நீளம் கொஞ்சம் அதிகம் தான்.

      புதையல் தேடும் கதையை பயங்கர த்ரில்லாக இல்லாமல் காமெடி படமாக எடுத்திருக்கிறார் கல்யாண். படத்தின் முற்பாதியில் ஒவ்வொருக்கும் அறிமுகத்தைக் கொடுத்துவிட்டு, எல்லோரையும் ஒன்றாக இணைத்திருக்கிறார். கூட்டம் கூட்டமாக நடிகர்கள் இருப்பதே காட்சியை மனதோடு ஒட்டவிடவில்லை. ஆளுக்கொரு பக்கம் எதையாவது, யாரையாவது தேடிக் கொண்டேயிருப்பது படத்தை ரசிக்க விடாமல் குழப்புகிறது. புதையல் தேடும் கதையின் ஸ்பூஃப் வெர்சனாக இருக்கும் போல என நினைத்துப் பார்த்தால் புதையல் இருப்பதையும் உறுதி செய்கிறார்கள். மொத்தத்தில் த்ரில்லரும் இல்லாமல், ஸ்பூஃபும் இல்லாத காமெடி படம் 'குலேபகாவலி'. 'குலேபகாவலி' - ஜஸ்ட் காமெடிக்காக பார்க்கலாம்.