twitter
    Tamil»Movies»Gurkha»Critics Review

    விமர்சகர்கள் கருத்து

    • படத்தில் லாஜிக் என்பது மருந்துக்குக்கூட இல்லை. காமெடி படத்துக்கு லாஜிக் பார்க்க வேண்டிய அவசியம் இல்லை என்றாலும், நகைச்சுவையாவது தூக்கலாக இருக்க வேண்டாமா?. தமிழ் சினிமாவில் காமெடி பஞ்சம் தலைவிரித்தாடுவது கூர்கா மூலம் நன்றாக தெரிகிறது. யோகி பாபு பேசுவது அனைத்தையுமே காமெடியாக நினைக்கும் சினிமாக்காரர்களுக்கு இது ஒரு எச்சரிக்கை மணி. படத்தில் நாயகியின் பெயர் மார்க்ரெட். அதை யோகி பாபு மார்க்கெட் என உச்சரிக்கிறார். இது தான் காமெடி என்றால் படம் எவ்வளவு மொக்கையாக இருக்கும் என யூகித்துக்கொள்ளுங்கள்.

      'காமெடிக்கு என தனியாக ஒரு எழுத்தாளரை வைத்து வசனங்களை எழுதி, காட்சிகளை அமைத்திருந்தால் முழு படமும் காமெடியாக இருந்திருக்கும். சமூகவலைதளங்களில் அதிக அளவில் கலாய்க்கப்பட்ட விஷயங்களை படத்தில் அதிகமாக பயன்படுத்தி இருப்பது சலிப்பை தான் ஏற்படுத்துகிறது.

      கடைசி 20 நிமிடங்களைப் போலவே, முழுப் படமும் காமெடியாக இருந்திருந்தால் இந்த 'கூர்கா'வுக்கு மெடல் குத்தி பாராட்டியிருக்கலாம்.