twitter
    Tamil»Movies»Imaikkaa Nodigal»Critics Review

    விமர்சகர்கள் கருத்து

    • இந்த படத்தின் உண்மையான ஷோ ஸ்டீலர் அனுராக் காஷ்யப் தான். ஒவ்வொரு அசைவிலும் சைக்கோ ருத்ராவாக பயமுறுத்துகிறார். அதுவும் மகிழ்திருமேனியின் குரல் கனக்கச்சிதம். ஆரம்பம் முதல் இறுதி வரை நயன்தாராவையும், அதர்வாவையும் ஓடவைத்திருக்கிறார். நம்ம பாலிவுட் இயக்குனருக்கு தமிழில் இனி கால்ஷீட் பிரச்சினை வரும் போல.

      நயன்தாராவுக்கு சரிசமமாக தன்னுடையே வேலையையும் கச்சிதமாக செய்திருக்கிறார் அதர்வா. ஆக்ஷன் காட்சிகளில் மிகவும் சிரமப்பட்டு நடித்திருக்கிறார். அதுவும் அந்த மருத்துமனை மாடியில் இருந்து குதித்து வரும் காட்சியிலும், சைக்கில் சேசிங் காட்சியிலும் பிண்ணி பெடலெடுத்திருக்கிறார்.

      தெலுங்கில் இருந்து தமிழுக்கு இறக்குமதியாகி இருக்கும் புதுவரவு ராஷி கண்ணாவுக்கு தவுசண்ட் லைக்ஸ். அழகு தேவதையாக வந்து அதர்வாவுடன் ரொமான்ஸ் செய்துவிட்டு காணாமல் போகிறார். உங்களுக்கும் கால்ஷீட் பிரச்சினை வர வாய்ப்பிருக்கு. இந்த படத்தின் இன்னொரு ஷோ ஸ்டீலர் குட்டிப்பாப்பா ஷாலு. செம க்யூட் பேபி.

      அதேபோல படத்தில் ஏகப்பட்ட லாஜிக் ஓட்டைகள். ருத்ரா ஒரு பெரிய சைக்கோ கொலைகாரனாக இருக்கலாம். அதற்காக நேரடியாக தொலைக்காட்சிக்கு போன் செய்து அடுத்தக்கடத்தல் குறித்து லைவ் அப்பேட் செய்வது, ஒட்டுமொத்த மெட்ரோ ரயில் ஸ்டேஷனையும் ஹேக் செய்வது எல்லாம் ரொம்ப ஓவர் பாஸ். ஒரு தனி ஆளை கண்டுப்பிடிக்கக்கூட முடியாத அளவுக்காக சிபிஐ இருக்கிறது. அப்படின்னா நம்ம அரசியல் தலைவர்கள் எல்லாம் ஆவுன்னா சிபிஐ விசாரணை வேணும்னு கேட்கிறது வேஸ்ட் போலயே. நாங்க சொல்றது சாம்பிள் தான் இயக்குனரே. ஒரு சிபிஐ அதிகாரி நினைத்தால், 'அந்த பசங்கல' அப்படி தான் பழிவாங்கனுமா என்ன...

      எடிட்டரின் கத்திரி, இன்னும் கூட பல காட்சிகளை டிரிம் செய்திருக்கலாம். இப்போல்லாம் யாரு பாஸ் 3 மணி நேரம் படம் பார்க்குறாங்க.