twitter

    விமர்சகர்கள் கருத்து

    • இந்தப் படம் ஹாலிவுட்டில் வெளியான 'ஹேண்ட்ஜாப் கேபின்' எனும் ட்ரெய்லரை தழுவி உருவான கதை. இந்தப் படத்திற்கு ஏற்றப்பட்ட அடல்ட் இமேஜ் ஹைப் காரணமாக ரசிகர்களே ரிலீஸை எதிர்பார்க்கத் தொடங்கினர்.

      ஃபேமிலி ஆடியன்ஸ், டிவி ரைட்ஸ் ஆகியவற்றிற்கு சிக்கல் வரும் என "A" சர்ட்டிஃபிகேட் வாங்க பலரும் அஞ்சும் நிலையில், இளைஞர்களை மட்டுமே குறிவைத்து முழுக்க முழுக்க அடல்ட் படமாகவே ப்ரொஜெக்ட் செய்யப்பட்டது இந்தப் படம். தொடர்ந்து, வெளியான டைட்டில் போஸ்டர் முதல், டீசர், ட்ரெய்லர், பாடல் என எல்லாமே டபுள் மீனிங் காட்சிகளால் நிரம்பியிருந்தன.

      தமிழ் சினிமாவில் அடல்ட் ஜானர் படங்கள் வெளிவருவது அபூர்வம். அந்தக் குறையை தான் போக்குவதாகக் கூறி அடுத்தடுத்து அடல்ட் ஜானர் படங்களை எடுத்து வருகிறார் சந்தோஷ் பி.ஜெயக்குமார். அடல்ட் படத்தில் ஹாரர் ஜானரை இணைத்து அடல்ட் ஹாரராக 'இருட்டு அறையில் முரட்டு குத்து' படத்தை உருவாக்கியிருக்கிறார். அடல்ட் படம் என அதிகாரப்பூர்வமாகவே அறிவித்து விட்டதால் எந்தக் கவலையும் இன்றி பிரித்து மேய்ந்திருக்கிறார் இயக்குநர்.