இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்
U/A | 2 hrs 33 mins |
Drama
Release Date :
15 Mar 2019
Audience Review
|
இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் இயக்குனர் ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கத்தில், ஹரிஷ் கல்யாண், ஷில்பா மஞ்சுநாத் மற்றும் பலர் நடித்த காதல் திரைப்படம். இப்படத்திற்கு சாம் சி எஸ் இசையமைத்துள்ளார்.
-
என்னது கங்குவா பட்ஜெட் 350 கோடி ரூபாயா?.. அடேங்கப்பா தலையே சுத்துதே
-
அந்த பயம் தான் காரணமா?.. அமரன் முதல் கங்குவா வரை.. ரிலீஸ் தேதியை முடிவு பண்ண முடியலையே!
-
Director Dharani: ஜீப்பை தூக்கினாரா விஜய்.. கில்லி இயக்குநர் தரணி சொன்னது என்ன?
-
இது கட்ட பஞ்சாயத்து.. ரத்னம் பட ரிலீஸுக்கு கடைசி நேரத்தில் சிக்கல்.. விஷால் அதிரடி குற்றச்சாட்டு!
-
படம் பார்க்க வரச் சொல்றாரு ஹரி.. ஆனால், விஷால் ‘ரத்னம்’ படத்தோட டிக்கெட் புக்கிங்கே ஆரம்பிக்கலையே?
-
மாட்டிக்கினாரு ஒருத்தரு.. சமந்தாவின் மாஜி கணவர் அந்த நடிகையுடன் டேட்டிங்கா?.. தீயாய் பரவும் பிக்ஸ்!
-
பில்மிபீட்தமிழ் சினிமா அளவுக்கு வேறு எந்த மொழியிலும் இத்தனை ஆயிரம் காதல் படங்கள் வந்திருக்குமா என்பது தெரியவில்லை. அந்த அளவுக்கு காதலை கொண்டாடி வருபவர்கள் நம் இயக்குனர்கள். ரஞ்சித் ஜெயக்கொடியின் இந்த இஸ்பேடு ராஜாவும் இதய ராணியும் திரைப்படமும், அப்படி ஒரு காதல் கொண்டாட்டம் தான். ஆனால், இன்னும் எத்தனை படங்கள் வந்தாலும், காதல் என்றுமே சலிக்காது என்பதை ஆணித்தரமாக கூறுகிறது இஸ்பேடு ராஜாவும் இதய ராணியும்.
'முதலில் மோதல் பிறகு காதல்', 'பணக்கார பெண்ணுக்கும் ஏழை பையனுக்கும் காதல்', என ஏற்கனவே நாம் பலமுறை பார்த்து சலித்துபோன அதே ஒன்லைன் தான் இந்த படமும். ஆனால் ரஞ்சித் ஜெயக்கொடியின் திரைக்கதையும், தனித்துவமான கதாபாத்திரங்களும், ராஜன்ராதமனாலனுடன் இணைந்து அவர் எழுதிய வசனங்களும், சாமின் இசையும், கவினின் ஒளிப்பதிவும் என எல்லாம் சேர்ந்து படத்தை புதிதாக காட்டியிருக்கிறது. இன்றைய தலைமுறை இளைஞர்கள், தங்களை எளிதாக இப்படத்துக்குள் புகுத்திக் கொள்வார்கள் என்பது நிச்சயம்.
இருப்பினும், இன்றைய இளைஞர்களை மையப்படுத்தி வரும் காதல் படங்களில் இருந்து தனித்து நிற்கிறான் இந்த இஸ்பேடு ராஜா. இவனை போல நம் ஊர் ரோமியோக்களும் யோசித்தால், நம் பெண்கள் அனைவருமே இதய ராணிகள் தான்...
விமர்சனங்களை தெரிவியுங்கள்