twitter
    Tamil»Movies»Jackpot»Critics Review

    விமர்சகர்கள் கருத்து

    • ஒரு வரியில் எழுதிவிடக் கூடிய கதையை இரண்டரை மணி நேர படமாக, சுவாரஸ்யம் குறையாமல் எடுக்கும் திறமை இயக்குனர் கல்யாணுக்கு நிறைய இருக்கு. முதல் பாதியில் ஆனந்த்ராஜ் அண்ட் கோவுடன், ஜோதிகாவும், ரேவதியும் சேர்ந்து செய்யும் ரகளைகள் சிரிப்பு மத்தாப்பூ.

      ஆனந்த்ராஜ் அண்ட் கோவில் உள்ள கோகோ டோனி அசால்ட்டா சிரிக்க வைக்கிறாரு. ப்ப்பா... சின்ன சின்ன டயலாக்ஸ் தான். ஆனா குபீர்ன்னு சிரிப்பு வருது. பழைய ஜோக் தங்கதுரை, மன்சூர் அலிகான், மொட்ட ராஜேந்திரன் என எல்லோருமே காமெடிக்கு கேரண்டி தருகிறார்கள். இருந்தாலும் இது ஜோதிகா ரசிகர்களுக்கு சரியான 'ஜாக்பாட்' தான்.