twitter
    Tamil»Movies»Jarugandi
    ஜருகண்டி

    ஜருகண்டி

    Release Date : 26 Oct 2018
    2.5/5
    Critics Rating
    Audience Review
    ஜருகண்டி தமிழ் அதிரடித் திரைப்படம். இத்திரைப்படத்தினை பிச்சுமணி இயக்க, ஜெய், ரெபா மோனிகா ஜான் மற்றும் அமித் குமார் திவாரி நடித்துள்ளனர். இப்படத்திற்கு போபோ சசி இசையமைத்துள்ளார். 

    கதை : 

    கார் சீசிங் வேலை செய்யும் நாயகன் ஜெய்க்கு, சொந்தமாக டிராவல்ஸ் ஆரம்பிக்க வேண்டும் என்பது லட்சியம். வங்கியில் லோன் கிடைக்காததால், நண்பன் டேனி மூலம் அறிமுகமாகும் இளவரசுவை வைத்து தவறான பாதையில் கடன் பெறுகிறார். அந்த விஷயம் காவல்துறை அதிகாரி போஸ் வெங்கட்டுக்கு தெரியவர, ஜெய்யையும், டேனியையும் மிரட்டி பணம் பறிக்க முயல்கிறார். மீண்டும் பணத் தேவையில்...
    • பிச்சுமணி
      பிச்சுமணி
      Director
    • tamil.filmibeat.com
      2.5/5
      சின்ன சின்ன டிவிஸ்டுகள், நிறைய கலாய் காமெடி, சேசிங், அதிரடி ஆக்ஷன் என ஒரு முழுநீள கமர்சியல் படத்தை தந்திருக்கிறார், வெங்கட் பிரபுவிடம் உதவியாளராக பணியாற்றி, ஜருகண்டி மூலமாக இயக்குனராக அறிமுகமாகி இருக்கும் பிச்சுமணி. குருநாதரை போலவே ஒரு சின்ன கான்செப்ட்டை கையில் வைத்துக்கொண்டு, விறுவிறுப்பான படத்தைத் தந்திருக்கிறார்.

      ஜெய்யை மாஸ் ஹீரோவாக புரோமோட் செய்ய அவரது நண்பரும் தயாரிப்பாளருமான நிதின் சத்யா முயற்சித்திருக்கிறார். ஜெய்க்கு நிறைய ஆக்ஷன் காட்சிகள் இருக்கின்றன. ரொம்ப ரிஸ்க் எடுக்காமல் அசால்டாக சண்டைக் காட்சிகளிலும் முகபாவனையை வைத்து மட்டுமே சமாளிக்க முயற்சித்திருக்கிறார். ரொமான்ஸ் காட்சிகளில் வழக்கமான அப்பாவி தான். பகவதியில் ஆரம்பித்து ஜருகண்டி வரை ஒரே மாதிரியான டயலாக் டெலிவரி ஜெய்.

      பாஜக தமிழிசை சௌந்தரராஜன், மெர்சல் விஜய் என செம போல்ட் கலாய்கள் படத்தில் நிறைய..