twitter
    Tamil»Movies»Jarugandi»Critics Review

    விமர்சகர்கள் கருத்து

    • சின்ன சின்ன டிவிஸ்டுகள், நிறைய கலாய் காமெடி, சேசிங், அதிரடி ஆக்ஷன் என ஒரு முழுநீள கமர்சியல் படத்தை தந்திருக்கிறார், வெங்கட் பிரபுவிடம் உதவியாளராக பணியாற்றி, ஜருகண்டி மூலமாக இயக்குனராக அறிமுகமாகி இருக்கும் பிச்சுமணி. குருநாதரை போலவே ஒரு சின்ன கான்செப்ட்டை கையில் வைத்துக்கொண்டு, விறுவிறுப்பான படத்தைத் தந்திருக்கிறார்.

      ஜெய்யை மாஸ் ஹீரோவாக புரோமோட் செய்ய அவரது நண்பரும் தயாரிப்பாளருமான நிதின் சத்யா முயற்சித்திருக்கிறார். ஜெய்க்கு நிறைய ஆக்ஷன் காட்சிகள் இருக்கின்றன. ரொம்ப ரிஸ்க் எடுக்காமல் அசால்டாக சண்டைக் காட்சிகளிலும் முகபாவனையை வைத்து மட்டுமே சமாளிக்க முயற்சித்திருக்கிறார். ரொமான்ஸ் காட்சிகளில் வழக்கமான அப்பாவி தான். பகவதியில் ஆரம்பித்து ஜருகண்டி வரை ஒரே மாதிரியான டயலாக் டெலிவரி ஜெய்.

      பாஜக தமிழிசை சௌந்தரராஜன், மெர்சல் விஜய் என செம போல்ட் கலாய்கள் படத்தில் நிறைய இருக்கின்றன. டேனியும், ரோபோ சங்கரும் காமெடிக்கு நிறையவே மெனக்கெட்டிருக்கிறார்கள். ஓரளவுக்கு ஒர்கவுட்டும் ஆகியிருக்கிறது.

      போபோ ஷஷியின் பாடல்கள் கேட்கும் ரகத்தில் இருக்கின்றன. ஆனால் பின்னணி இசையில் அருமையான பங்களிப்பை தந்திருக்கிறார். மேகராமேன் ஆர்.டி.ராஜசேகர் தன்னால் முடிந்த அளவிற்கு படத்தை மெருகேற்றி இருக்கிறார். படத்தை வேகத்தை கூட்ட எடிட்டர் பிரவீன் கே.எல். இன்னும் கொஞ்சம் முயற்சித்திருக்கலாம்.

      நாயகன் ஜெய்யின் கதாபாத்திரம் புத்திசாலித்தனமாக யோசித்து பிரச்சினைகளை தீர்க்கக் கூடியதா அல்லது அதிரடியாக இறங்கி அடித்து பிரச்சினையை முடிப்பா என்பதை முடிவு செய்ய முடியாமல் இயக்குனர் நிறையவே குழம்பி இருக்கிறார்.

      விடுமுறை நாட்களில் வீட்டில் போரடிக்கிறது என புலம்புபவர்கள் இந்த படத்துக்கு ஜருகண்டி... ஜருகண்டி.