twitter

    ஜிகர்தண்டா கதை

    ஜிகர்தண்டா  2014ம் ஆண்டில் வெளியான ஒரு இந்தியத் தமிழ் திரைப்படமாகும். தயாரிப்பாளர் கதிரேசனின் தயாரிப்பில் சித்தார்த், லட்சுமி மேனன் ஆகியோர் நடித்த, இப்படத்தை எழுதி இயக்கியுள்ளார் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ். தமிழ்நாட்டிலுள்ள மதுரையை கதைக்களமாகக் கொண்டு எடுக்கப்பட்ட இப்படத்திற்கான படப்படிப்பு, 2013ம் ஆண்டு சூன் மாதம் 12 ஆம் நாள் மதுரையில் தொடங்கியது. இப்படத்தின் முன்னோட்டம் 2014ம் ஆண்டு பிப்ரவரி 9 ஆம் நாள் வெளியிடப்பட்டது. 2014ம் ஆண்டு ஆகத்து மாதம் 1ம் நாள் திரைக்கு வந்தது.

    கதை

    ஒரு சிறிய அல்லது குறும் படம் தயாரிப்பு நிறுவனத்தில் பகேற்கிறார். அதில் இயக்குனர் நாசர் கார்த்திக் கை நிராகரிக்கிறார். ஆனால் தயாரிப்பாளர் ஆடுகளம் நரேன் நாசருக்கு எதிராக வாதாடுவார். அதோடு    கார்த்திக் உடைய படத்தை தான் தயாரிப்பதாகவும் கூறுவார். அடுத்த நாள் கார்த்திக் தயாரிப்பாளரை சந்திக்க செல்வார். ஆனால் தயாரிப்பாளர் விருப்பமின்றி அதிரடி படமான நாயகன், தளபதி, தி கோட் பாதர் போன்ற படத்தை எதிர்பார்க்க, கார்த்திக்  ஒரு ரவடி இன் வாழ்க்கை கதையை பற்றி எழுத முடிவுசெய்தார்.

    அவருடைய மாமா (கஜராஜ்) பத்திரிக்கையில் உள்ளார். அவரின் உதவியுடன், கார்த்திக் , அசால்ட் சேது (பாபி சிம்ஹா) மதுரையை  சேர்த்த  ஒரு கூட்டத்தின் தலைவர். சேதுவின் வாழ்க்கை பற்றி எழுதி அதை படமாக்க முடிவு செய்தார். அதனால் கார்த்திக் தன் கல்லூரி தோழன் ஊரணி (கருணாகரன்)-னை  சந்திக்க மதுரைக்கு சென்றார். கார்த்திக் மதுரையில் தங்கி சேதுவை பற்றி அறிய ஒரு பழைய கடைகரரை  அணுகினர். பின்பு கயல்விழி (லக்ஷ்மி மேனன்) என்ற பெண்ணை சேதுவை பற்றி அறிவதற்காக காதலித்தார். ஏனென்றால் கயல்விழி இன் அம்மா சேது வீட்டில் சமையல் செய்பவர். அதனால் சேதுவை பற்றி அவர்களுக்கு தெரியும்.

    ஒரு காலகட்டத்தில் சேதுவிற்கு கார்த்திக் பற்றிய உண்மை தெரிகிறது. அதனால் சேது தன்னை பற்றிய கதையில் தானே நடிப்பதாக கூறினார். சேதுவிற்கு நடிக்க வரவில்லை. அதனால்  கார்த்திக் கோச் முத்து (குரு சோமசுந்தரம்) என்பவரை சேதுவிற்கு நடிப்பு கற்றுகொடுக்க ஏற்பாடு செய்தார்.

    பல நடிப்பு பயிற்சிகளை முடித்தபின் சேதுவை வைத்து படத்தை தயாரித்தனர்.அப்படத்திற்கு எ.குமார் என்று பெயர் வைத்தனர். படம் வெளியான பின்பு சேது மிகுந்த அதிர்ச்சியடைந்தார். என்னென்றால், எ.குமார் என்றால் அசால்ட் குமார் என்று கூறியிருந்தனர். அனால் உண்மையில் எ.குமார் என்றல் அழுகுனி குமார் என்று திரையில் போடப்பட்டிருந்தது. அதிரடி திரைப்படம் கடைசியில் நகைச்சுவை திரைப்படமாக இருந்ததால், அனைவரும் படத்தை பார்த்து சிறக்க ஆரம்பித்தனர். அதனால் ஆத்திரமடைந்த சேது கார்த்திக் தன்னை முட்டாளாக மாற்றிவிட்டார் என்றுஎண்ணி கார்த்திக்கை கொள்ள நினைக்கிறார். அதே சமயம் கார்த்திக்கும் சேதுவை கொல்ல துப்பாக்கியுடன் வருகிறார். சேது கார்த்திக்கை கொன்றார? அல்லது கார்த்திக் சேதுவை கொன்றார? இறுதியில் என்ன நேர்ந்தது என்பது உச்சகட்டம்.
    **Note:Hey! Would you like to share the story of the movie ஜிகர்தண்டா with us? Please send it to us ([email protected]).