twitter
    Tamil»Movies»Jiivi»Critics Review

    விமர்சகர்கள் கருத்து

    • வலுவான கதையை எழுதி, அதற்கு மிக சுவாரஸ்யமாக திரைக்கதை அமைத்திருக்கிறார் பாபுதமிழ். அதனை குழப்பமில்லாமல், தெளிவாக படமாக்கி இருக்கிறார் இயக்குனர் கோபிநாத். இருவருக்கும் மிகப் பெரிய பாராட்டுகள்.

      8 தோட்டாங்கள் படத்தில் அப்பாவி போலீசாக, அதிகம் பேசாமல் நடித்த வெற்றிக்கு இந்த படத்தில் அப்படியே உல்டாவான வேடம். முந்தைய படத்தை போலவே சிறப்பாக நடித்திருக்கிறார். படத்தில் புத்திசாலித்தனமாக அவர் செய்யும் ஒவ்வொரு காரியமும் நம்மை ஈர்க்கிறது.

      வெகுநாட்கள் கழித்து மீண்டும் ஒரு நல்ல படத்தில் நடித்திருக்கிறார் கருணாகரன். அதிகம் அலட்டிக்கொள்ளாமல் அமைதியாக நடித்து ஸ்கோர் செய்கிறார். ஒரு சில இடங்களில் அவரது கவுண்டர் டயலாக்குகள குபீர் சிரிப்பை வரவைக்கிறது.