twitter
    Tamil»Movies»Jithan 2»Critics Review

    விமர்சகர்கள் கருத்து

    • ரமேஷ் நடிக்க முயற்சி செய்திருக்கிறார். ஆனால் பலன்தான் ஒன்றுமில்லை. அவருக்கு ஜோடியாக ஒரு பெண் வருகிறார். மூன்று காட்சிகள்தான். ஆனால் மூன்றிலும் 'ஏன் எனக்கு போன் பண்ணல.. போ.. எங்கிட்ட பேசாத' என்று கூறிவிட்டு ஓடுகிறார். அவருக்கு வசனமே அவ்வளவுதான்!

      சிருஷ்டி டாங்கே அழகாக வந்து போகிறார். அவரது காதல் ப்ளாஷ்பேக் பெரிதாகக் கவரவில்லை.

      ஸ்ரீகாந்த் தேவா இசையில் சிலோன் கானா ஸ்டைலில் ஒரு குத்துப்பாட்டு கேட்க முடிகிறது. வேறு எங்கும் அவர் இசை, பாடல்கள் எடுபடவில்லை. சுரேஷ் குமாரின் ஒளிப்பதிவில் கொடைக்கானலின் குளுமையை உணர முடிந்தது.

      ஜித்தனில் இருந்த அமானுஷ்யம், புத்திசாலித்தனமான காட்சியமைப்பில் ஆயிரத்தில் ஒரு பங்கு கூட அதன் இரண்டாம் பாகம் என்று சொல்லப்பட்ட இந்தப் படத்தில் இல்லை. அந்தப் படத்துக்கும் இதற்கும் இம்மியும் தொடர்பில்லை. அப்புறம் எதற்கு இரண்டாம் பாகம் என்ற தலைப்பு?