twitter
    Tamil»Movies»July Kaatril»Critics Review

    விமர்சகர்கள் கருத்து

    • இந்த காலத்து இளைஞர்கள் காதல், திருமணம் போன்ற விஷயங்களில் எந்த அளவுக்கு அலைபாய்கிறார்கள் என்பதை அனந்த் நாக் கதாபாத்திரம் மூலம் இயக்குனர் விளக்கியுள்ளார். அதனை ஒவ்வொரு கதாபாத்திரத்தின் பார்வையின் மூலம் விவரித்து, வித்தியாசமான முறையில் திரைக்கதை அமைத்திருக்கிறார்.

      அனந்த் நாக்குக்கு நாயகனாக முதல் படம். குழப்பமாகும் காட்சிகளில் நன்றாக நடித்து இருக்கிறார். காதல் காட்சிகளிலும் குழப்பமாகவே இருப்பது ஏன் என்று தெரியவில்லை. எப்போதும் ஒரே மாதிரியாக முகத்தை வைத்துக் கொண்டிருப்பதை தவிர்த்திருக்கலாம். சம்யுக்தா மேனன், அஞ்சு குரியன் என இரண்டு கதாநாயகிகளும் படம் முழுக்க நம்மை கட்டி போடுகிறார்கள். அஞ்சு குரியன் சேலையில் அழகாக வந்து காதலிக்க வைக்கிறார். சம்யுக்தா மேனன் தன் பங்குக்கு மாடர்ன் உடைகளில் அழகாக இருக்கிறார். இரண்டு கதாநாயகிகளும் சிறப்பான நடிப்பை கொடுத்து இருக்கிறார்கள்.

      படம் ஆரம்பத்தில் இருந்தே அன்ன நடை போட்டு மெதுவாக நகர்கிறது. ஒவ்வொரு கதாபாத்திரத்தின் பார்வையில் இருந்து காட்சிகள் விரிவதால், பார்த்த காட்சியையே மீண்டும் பார்ப்பது சுவாரஸ்யமாக இல்லை. காதல் படங்களில் வசனமும், இசையும் தான் முக்கியம். ஆனால் இதில் இந்த இரண்டு விஷயங்களும் சொதப்பல். படத்தின் நீளத்தையும் குறைத்து இருக்கலாம். காதலில் ஏற்படும் மனக்குழப்பங்களை தெளிவாக சொன்ன விதத்தில் இந்த ஜூலை காற்றில், இளைஞர்களுக்கான தென்றலாக மாறி இருக்கிறது.