twitter
    Tamil»Movies»Junga»Critics Review

    விமர்சகர்கள் கருத்து

    • படத்தின் முக்கிய உயிர்நாடியே விஜய் சேதுபதி தான். அவரை நம்பியே... அவருக்காகவே காட்சிகளை அமைத்திருக்கிறார் இயக்குனர். இந்த படத்தின் தயாரிப்பாளரும் தான் தான் என்பதால், இன்னும் கூடுதல் உழைப்பை தந்திருக்கிறார் விஜய் சேதுபதி. தனது வழக்கமான சீரியஸ் காமெடி வசனங்களில் லைக்ஸ் அள்ளுகிறார். படத்தில் இவருக்காகவே நிறைய வசனங்கள் இருக்கின்றன. போட்ட திட்டம் சொதப்பும் போது டான் டாவடிக்குக் கூடாது என சாயிஷாவிடம் அவர் பேசும் காட்சி செம ஹைலைட்.

      விஜய் சேதுபதியை வைத்து இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா எனும் காமெடி பிளாக் பஸ்டர் படத்தை கொடுத்த கோகுல் தான் இப்படத்தின் இயக்குனர். சுவாரஸ்யமான பிளாஷ் பேக் காட்சிகள், பிளாக் காமெடி, சின்னதாக மற்ற படங்களை கலாய்க்கும் ஸ்பூப் காமெடி என முதல் பாதியை அலுப்பில்லாமல் கொடுத்திருக்கிறார். ஆனால் பாரீஸ் எபிசோடில் இருந்து படம் டல்லடிக்க தொடங்கிவிடுகிறது.

      விஜய் சேதுபதியை மட்டுமே நம்பி படத்தை எடுத்திருக்கிறார். அதனால் தானோ என்னவோ, கதை, திரைக்கதை, லாஜிக் இது பற்றி எல்லாம் பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை போல. இருந்தாலும், கஞ்ச டான் செய்யும் அட்ராசிட்டிகளுக்காக இயக்குனரை பாராட்டலாம். ஆனா என்னதான் கஞ்ச டானாக இருந்தாலும், ஐஸ் கட்டி ஆறுல நீந்தி போறதெல்லாம் டூ மச் பாஸ். இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரவோட ஒப்பிடும் போது, உங்கக்கிட்ட இருந்து இன்னும் எதிர்பார்தோம் கோகுல்.

      சாயிஷா, மடோனா என படத்தில் இரண்டு ஹீரோயின்கள். இருவருக்குமே பெரிதாக வேலை ஒன்றும் இல்லை. செகன்ட் ஹீரோயின் மடோனாவுக்கு ஒரு பாட்டு, நான்கு காட்சிகள். முதல் ஹீரோயின் சாயிஷாவுக்கு மூன்று பாட்டு, நிறைய காட்சிகள். தனது அபாரமான நடனத்தால், ரசிகர்களை ஆட்டிப்படைக்கிறார்.

      ஏற்கனவே சொன்னது போல படத்தின் பலம் விஜய் சேதுபதி, யோகிபாவு காம்போ தான். ஆண்டவன் கட்டளை படத்தில் கம்மியா காமெடி செய்த இந்த ஜோடி, ஜுங்காவில் தெறிக்கவிட்டிருக்கிறது. பழைய காரை பட்டி பார்த்து, டிங்கரிங் செய்து, பெயின்ட் அடித்து ஓட்ட முயன்றிருக்கிறார் இயக்குனர். ஒரு டான் உருவாவதெல்லாம் விக்ரமன் படம் மாதிரி ஒரு பாட்ல நடக்குற விஷயமாக பாஸ். லாஜிக் பற்றி எல்லாம் ஜுங்கா கவலைப்படவே இல்லை.