twitter
    Tamil»Movies»Kaala»Critics Review

    விமர்சகர்கள் கருத்து

    • ரஜினி - காலாவில் ரஜினியின் நடிப்பு வேற லெவல். பேரக்குழந்தைகளுடன் கொஞ்சி விளையாடுவது, மனைவியிடம் பம்மி விழிப்பது, சரினாவை பார்த்ததும் காதலில் மூழ்குவது, எதிரிகளை கண்களாலேயே அடக்குவது என கிளாசாக மிரட்டி இருக்கிறார். கபாலியை போல், ரஜினிக்குள் இருக்குள் ஒரு நல்ல நடிகனை அழகாக வெளிகாட்டி இருக்கிறார். குறிப்பாக எந்த ஈகோவும் பார்க்காமல், இயக்குனரின் நடிகராக நடித்துக் கொடுத்திருக்கிறார்.

      நானா படகேர் - ஒரு அரசியல் கட்சி தலைவராகவே திரையில் அப்படியே அச்சு அசலாக வாழ்ந்திருக்கிறார். தன்னை விட ஒரு பவர் புல்லான வில்லன் காலாவுக்கு இருக்க முடியாது என நிரூபித்திருக்கிறார். இரண்டாம் பாதி முழுவதையும் ஆக்கிரமித்துக்கொள்கிறார்.

      ஈஸ்வரி ராவ் - இவர் தான் காலா படமே என சொல்லும் அளவுக்கு, காட்சிக்கு காட்சி ஸ்கோர் செய்கிறார். கணவனின் முன்னாள் காதலியை பார்த்து பொறாமைபடுவது, கணவனிடம் சண்டைபோடுவது போல், அவர் இசைவுக்கு ஏற்ற மாதிரி நடந்துகொள்வது என செல்விக்கு உயிர்கொடுத்திருக்கிறார். ஒரு நல்ல ரீ-என்ட்ரி ஈஸ்வரி ராவுக்கு. அழகாக பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்.

      காலா சொல்ல வரும் செய்தி இந்த உலகுக்கு உரக்க சொல்லப்பட வேண்டும். அந்த வகையில் காலா, ரஜினி பாதி, ரஞ்சித் பாதி கலந்து செய்த கலவை.