twitter
    Tamil»Movies»Kabilavasthu»Critics Review

    விமர்சகர்கள் கருத்து

    • நாம் பரிதாபத்தோடு கடந்துபோகும் அடித்தட்டு மக்களின் வாழ்க்கை அவலத்தை பதிவாக்கி அதனை நாட்டின் முதல் குடிமகன் வரை எடுத்து சென்ற நேசம் முரளிக்கு முதலில் பாராட்டுகள். கழிவறைகளை சுத்தம் செய்வது, அங்கேயே வாழ்வது என எந்த சங்கடமும் படாமல், நடைபாதைவாசியாகவே வாழ்ந்திருக்கிறார் நேசம் முரளி.

      அவரது தங்கையாக வரும் பேபி ஐஸ்வர்யா, மனைவி நந்தினி, பாட்டி வான்மதி, பழைய இரும்புக்கடை பாய் பாண்டு, போலீசாக மன்சூர் அலிகான், குப்பை பொறுக்கும் கோவை செந்தில் என அனைவருமே தங்கள் பங்களிப்பை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.

      வெறும் ஆவணமாக, ஒரு பதிவாக மட்டுமில்லாமல் நடைபாதைவாசிகளின் வாழ்க்கையை கண்முன் விரிக்கிறது கபிலவஸ்து. காதல், பாசம், ஆக்‌ஷன், காமெடி எல்லாம் சேர்த்து ஒரு முழு நீள படமாக வந்துள்ளது படம்.