twitter
    Tamil»Movies»Kadai Kutty Singam»Critics Review

    விமர்சகர்கள் கருத்து

    • விவசாயம், விவசாயம் என்று சும்மா கூவாமல் அதை உணர்வு பூர்வமாக கூறியிருக்கிறார் இயக்குனர் பாண்டிராஜ். அதோடு ஜல்லிக்கட்டு ரேக்கலா ரேஸ் என கிராமவாழ்க்கையை மிக அழகாக படம் பிடித்துள்ளார். படத்தில் துணை நடிகர்களைவிட முக்கிய நடிகர்கள் அதிகம். காரணம் கதையின் அம்சம் என்று தான் சொல்ல வேண்டும். ஒரு கூட்டு குடும்பத்தின் அத்தனை உறவு முறைகள், அந்த பந்தத்தை அனைவரும் உணர்ந்து வெளிபடுத்தியுள்ளார்கள்

      படத்தில் நடித்த அனைவரும் நான் நீ என்று போட்டி போட்டு நடித்துள்ளனர் அதோடு சரியான கதாபாத்திர தேர்வுகள் அதுக்கும் இயக்குனருக்கு ஒரு பாரட்டு கொடுத்தே ஆக வேண்டும். ஒரு கிராமத்து கதை எழுதுவதோடு அதற்கு சரியான திரைகதை அமைந்தால் தான் அந்த படம் வெற்றி படமாக அமையும் அந்த வகையில் இந்த படத்தில் எல்லா அம்சங்களையும் மிக தெளிவாக படம் பிடித்துள்ளார் இயக்குனர்.

      கார்த்தி நடிப்பு இந்த படத்தில் ஒரு படி மேல் என்று தான் சொல்லணும் விவசாயத்தை பற்றி கல்லூரியில் பேசும் போதும் சரி, கிளைமாக்ஸ் காட்சியிலும் எங்கு தன் குடும்பம் பிரிந்து விடக்கூடாது என்று போராடும் போதும் சரி அருமையான நடிப்பை வெளிபடுத்தியுள்ளார். இந்த கதைக்கு மிக பெரிய பலம் வசனம் அந்த வசனங்கள் மிகவும் அழுத்தம் திருத்தமாக பேசி உயிர் கொடுத்து இருக்கிறார் .