twitter

    விமர்சகர்கள் கருத்து

    • கொரியப் படமான Nae Kkangpae Kateun Aein-வின் உரிமையை ரூ 40 லட்சத்துக்கு வாங்கி காதலும் கடந்து போகும் படத்தை எடுத்திருக்கிறார். கொஞ்சம் யோசித்திருந்தால் இதை விட பிரமாதமான கதை வட சென்னையிலோ, ஓஎம்ஆர் ஐடி காரிடாரிலோ கிடைத்திருக்கும்!

      எதார்த்தமான கதை. சினிமாத்தனம் இல்லாத கதை மனிதர்கள். இடைவேளைக்குப் பிறகு இலக்கில்லாமல் பயணிப்பது போன்ற உணர்வைத் தந்தாலும், கடந்து போகிற மேகங்கள் மாதிரிதான் காதலும் என்பதை அழகாகச் சொல்லியிருக்கிறார் நலன் குமாரசாமி.

      படத்தின் இன்னொரு ப்ளஸ்... வலிந்து திணிக்கப்படாத நகைச்சுவை.

      நாயகி மடோனாதான் படத்தின் பலம் (ப்ரேமம் புகழ்). அழகு, நடிப்பு இரண்டிலுமே டிஸ்டிங்ஷன். தமிழ் சினிமா அத்தனை சீக்கிரம் இவரை கேரளாவுக்கு அனுப்பாது என நம்பலாம்.

      தூங்கு மூஞ்சி, சோம்பேறி, நல்ல மனசு கொண்ட அரைகுறை ரவுடி... இதுதான் படத்தில் விஜய் சேதுபதியின் கேரக்டர். அச்சு அசலாகப் பிரதிபலிக்கிறார். எஸ்கிமோ நாய் என்ற வார்த்தையால் பட்ட வலியை அவர் சொல்லிக் காட்டும் விதம் க்ளாஸ்.

      நடிப்பிலும், காட்சிப்படுத்துதலிலும் இருந்த தேர்ச்சியும் ஒழுங்கும் திரைக்கதையிலும் இருந்திருக்கலாம். ஆனால் முழுமைத்துவம் என்பது மனிதனுக்கே இல்லை.. அந்த மனிதனின் படைப்பில் சின்னச் சின்ன குறைகள் இருக்கத்தானே செய்யும். அப்படி எடுத்துக் கொண்டால் இந்தப் படத்தை நீங்கள் லயித்து ரசிக்க முடியும்!