twitter
    Tamil»Movies»Kalari»Critics Review

    விமர்சகர்கள் கருத்து

    • தங்கை மீது அதீத பாசம் வைத்திருக்கும் அண்ணன் கிருஷ்ணா. போகிறவர் வருகிறவர் என எல்லோரிடமும் தர்ம அடி வாங்கினால், திருப்பி அடிக்க தைரியம் இல்லாத கோழை. இந்த கதாபாத்திரத்தை நிறைவாக செய்திருக்கிறார். கிருஷ்ணாவை காதலிப்பது மட்டுமே வித்யா பிரதீப்பின் வேலை. கடமையே கண்ணாயிரம் என கொடுத்த வேலையை கச்சிதமாக செய்திருக்கிறார். தங்கையாக வரும் சம்யுக்தாவை, இனி நிறைய சினிமாக்களில் ஹீரோவின் தங்கையாக பார்க்கலாம். நன்றாகவே நடித்திருக்கிறார்.

      தங்கச்சி இப்படி ஒரு கஷ்டத்துல இருக்கும் போது எந்த அண்ணனாவது ஹீரோயின் கூட டுயட் பாடுவானா இயக்குனர் சார். ஹீரோ அப்பாவி தான். அதுக்காக இப்படியா. அதுவும் இன்னார் தான் இதுக்கெல்லாம் காரணம்னு ஈஸியா யூகிக்க முடிஞ்சுடுது. அதனால சுவாரஸ்யமும் போய்விடுகிறுது.

      எம்.எஸ்.பாஸ்கர் எந்நேரமும் குடிச்சுகிட்டே இருப்பது ஒருக்கட்டத்துல சலிப்பை ஏற்படுத்திடுது. தயது செய்து பிளாக் பாண்டிய நம்பியெல்லாம் இனி காமெடி டிராக் அமைக்காதீங்க இயக்குனர் சார்.

      வி.வி.பிரசன்னா இசையில் பாடல்கள் எல்லாம் சுமார் ரகம். கேரளாவின் தமிழர் பகுதியை அழகாக காட்டியிருக்கிறது குருதேவின் ஒளிப்பதிவு. அதை தேவைக்கு ஏற்ப பயன்படுத்தி இருக்கிறார் படத்தொகுப்பாளர் பிரபாகர்.