twitter
    Tamil»Movies»Kalavani 2»Critics Review

    விமர்சகர்கள் கருத்து

    • வழக்கம் போல் இந்த படத்திலும் கிராமத்து இளைஞனாக இயல்பாக நடித்திருக்கிறார் விமல். லிப்சிங்க் இல்லாமல் வசனம் பேசினாலும், சிரிப்பு வரும்படியாக சேஷ்ட்டைகள் செய்து ரசிக்க வைக்கிறார். தேர்தலில் ஜெயிக்க அவர் செய்யும் களவாணித்தனங்கள் அல்டிமேட் அட்ராசிட்டிகள்.

      விமல் - ஓவியா ஜோடி தடுமாறும் இடங்களில் எல்லாம், இளவரசு - சரண்யா ஜோடிதான் அதை பேலன்ஸ் செய்கிறது. களவாணி இரண்டிலும் இவர்களது ரகளை தொடர்கிறது. 'ஆனி போய், ஆடிபோய், ஆவணி வந்தா 'அன்னப்போஸ்ட்(Unopposed) தான்' என மகனை கெடுக்கும் அதேவேலையை இதிலும் செய்து ரசிக்க வைக்கிறார் தமிழ் சினிமாவின் 'அம்மா' சரண்யா.

      பாடல்கள் கேட்கும் படியாக இருந்தாலும், மனதில் பதியவில்லை. மாசானியின் ஒளிப்பதிவில் ஊரும், ஊராரும் அழகாக தெரிகிறார்கள். ராஜா முகமதுவின் எடிட்டிங்கில் இரண்டாம் பாதி படம் செம சுவாரஸ்யம்.

      இரண்டாம் பாதியை போல் முதல் பாதியிலும் காமெடியை கூட்டியிருந்தால் இந்த களவாணியும் ரசிக்க வைத்திருப்பான். முந்தைய பாகத்தை ஒப்பிடும்போது, இரண்டாவது களவாணி மனதை கொள்ளையடிக்க தவரிவிட்டான்.