twitter
    Tamil»Movies»Kanaa»Critics Review

    விமர்சகர்கள் கருத்து

    • ஒரு பெண் கிரிக்கெட் விளையாட ஆசைப்படும் போது, அதற்கு எப்படி எல்லாம் பிரிச்சினை வரும் என்பதை மிக அழுத்தமாகவும், அதே நேரத்தில் யதார்த்தமாகவும் பதிவு செய்திருக்கிறார்கள். மற்றொரு பக்கம் இன்று நம் நாட்டில் விவசாயமும், விவசாயிகளும் என்ன பாடுபடுகிறார்கள் என்பதையும் சமரசமின்றி கூறியிருக்கிறார் இயக்குனர்.

      ஒலிக்கலவை, கலை இயக்கம், சண்டை காட்சிகள் என படத்தில் வரும் அனைத்துமே பாராட்டதக்க வகையில் அமைந்திருக்கின்றன. காமெடி ஏரியாவில் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தியிருந்தால், இன்னமும் கூட ரசித்திருக்கலாம்.

      படத்தின் கேட்சிங் லைன் 'உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல்'. உங்கள் கனா பலித்துவிட்டது இயக்குனர் அருண்ராஜா காமராஜ். இப்போ நீங்க சொன்னாலும் இந்த உலகம் கேட்கும்...