twitter
    Tamil»Movies»Kanne Kalai Maane
    கண்ணே கலைமானே

    கண்ணே கலைமானே

    U | 2 hrs 4 mins | Comedy
    Release Date : 22 Feb 2019
    2.5/5
    Critics Rating
    2.5/5
    Audience Review
    கண்ணே கலைமானே இயக்குனர் சீனு ராமசாமி இயக்கத்தில் நடிகர் உதயநிதி ஸ்டாலின், தமன்னா நடித்துள்ள காமெடி மற்றும் காதல் திரைப்படம் . இத்திரைப்படத்தை இப்படத்தின் கதாநாயகரான உதயநிதி ஸ்டாலினின் ரெட் கெய்ன்ட் மூவிஸ் நிறுவனத்தின் மூலம் தயாரித்துள்ளார். இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

    கண்ணே கலைமானே இயக்குனர் சீனு ராமசாமி இயக்கத்தில் உருவாகும் கிராம விவசாயிகளின் கதை. இப்படத்தில் உதயநிதி ஸ்டாலின் விவசாயியாக நடிக்க, கிராம வங்கி ஆய்வாளராக தமன்னா நடித்துள்ளார். விவசாய கடன் மற்றும் விவசாயிகளின் வாழ்க்கையை மையமாக வைத்து இக்கதை உருவாகியுள்ளது.
    • சீனு ராமசாமி
      சீனு ராமசாமி
      Director
    • உதயநிதி ஸ்டாலின்
      உதயநிதி ஸ்டாலின்
      Producer
    • யுவன் ஷங்கர் ராஜா
      யுவன் ஷங்கர் ராஜா
      Music Director
    • பில்மிபீட்
      2.5/5
      கணவன் - மனைவி இடையேயான அன்பையும், புரிதலையும் சமூக அக்கறை கலந்து சொல்கிறது கண்ணே கலைமானே.

      படம் ஆரம்பித்தது முதல் இறுதி வரை ஒரே மாதிரி மெதுவாக நகர்கிறது. விவசாயிகள் தற்கொலை, நீட் தேர்வு, இயற்கை விவசாயம் உள்பட ஏகப்பட்ட விஷயங்களை படத்தில் பேசியிருக்கிறார்கள். ஆனால் அவை அனைத்தும் படத்தின் ஒரு பகுதியாக இல்லாமல், வேண்டுமென்றே திணிக்கப்பட்ட பிரச்சாரமாக வருவதால் ஓவர் டோஸாக மாறி மயக்கம் வர வைக்கிறது. உதயநிதியின் இமேஜை தூக்கிப்பிடிக்க இயக்குனர் நிறையவே மெனக்கெட்டி இருக்கிறார்.

      முதல் பாதியில் சமூக பிரச்சினை, காதல் என நகரும் படம், இரண்டாம் பாதியில் குடும்ப பிரச்னையில் நுழைந்துவிடுகிறது. இரண்டாம் பாதியில் வரும் நிறைய காட்சிகளில் லாஜிக் மிஸ்ஸிங். மொத்தத்தில் இது சீனுராமசாமி படம் தானா என்ற கேள்வியே படம் முடிந்து வெளிவரும் போது மனதில் எழுகிறது...