twitter
    Tamil»Movies»Kanne Kalai Maane»Critics Review

    விமர்சகர்கள் கருத்து

    • கணவன் - மனைவி இடையேயான அன்பையும், புரிதலையும் சமூக அக்கறை கலந்து சொல்கிறது கண்ணே கலைமானே.

      படம் ஆரம்பித்தது முதல் இறுதி வரை ஒரே மாதிரி மெதுவாக நகர்கிறது. விவசாயிகள் தற்கொலை, நீட் தேர்வு, இயற்கை விவசாயம் உள்பட ஏகப்பட்ட விஷயங்களை படத்தில் பேசியிருக்கிறார்கள். ஆனால் அவை அனைத்தும் படத்தின் ஒரு பகுதியாக இல்லாமல், வேண்டுமென்றே திணிக்கப்பட்ட பிரச்சாரமாக வருவதால் ஓவர் டோஸாக மாறி மயக்கம் வர வைக்கிறது. உதயநிதியின் இமேஜை தூக்கிப்பிடிக்க இயக்குனர் நிறையவே மெனக்கெட்டி இருக்கிறார்.

      முதல் பாதியில் சமூக பிரச்சினை, காதல் என நகரும் படம், இரண்டாம் பாதியில் குடும்ப பிரச்னையில் நுழைந்துவிடுகிறது. இரண்டாம் பாதியில் வரும் நிறைய காட்சிகளில் லாஜிக் மிஸ்ஸிங். மொத்தத்தில் இது சீனுராமசாமி படம் தானா என்ற கேள்வியே படம் முடிந்து வெளிவரும் போது மனதில் எழுகிறது.