twitter
    Tamil»Movies»Kee»Critics Review

    விமர்சகர்கள் கருத்து

    • ப்ளூ வேல் கேமைப் பற்றி எல்லோரும் அறிந்திருப்போம். ஆனால் அதை விளையாடி பார்க்க எல்லோருக்கும் ஒரு தயக்கம் இருக்கும். அப்படிப்பட்டவர்களுக்கு ப்ளூ வேல் கேமை திரையில் பார்க்கும் வாய்ப்பை ஏற்படுத்தி தந்திருக்கிறார் இயக்குனர் காளீஸ். கற்பனையின் மூலம் திரில்லிங்காக சொல்லியிருக்கிறார். கிட்டத்தட்ட ஒரு ஆங்கில சயின்ஸ் பிக்ஷன் படம் பார்த்த உணர்வு ஏற்படுகிறது.

      இன்னும் சின்னப் பையனாகவே தெரிகிறார் ஜீவா. கல்லூரி பையன் என்று சொன்னாலும் நம்பும்படியாகத் தான் இருக்கிறது. அசால்ட் மேனரிசம், ரொமான்ஸ், ஆக்ஷன், பாசம் என கலவையான நடிப்பை தந்திருக்கிறார். அனைகா சோடி செமையாக கிளாமர் காட்டி சொக்க வைக்கிறார். சில நேரம் கொஞ்சம் நடிக்கவும் செய்திருக்கிறார். அம்மா சுஹாசினிக்கு 4, 5 காட்சிகள் மட்டுமே. மருத்துவமனை காட்சியில் பழைய சுஹாசினியை பார்க்க முடிகிறது.

      சின்ன பசங்கள வெச்சிக்கிட்டு டபுள் மீனிங் காமெடி செய்வது எல்லாம் தேவை தானா இயக்குனரே. பெண்களை பற்றிய கேவலமான சித்தரிப்பும் கண்டிக்கப்பட வேண்டிய விஷயம். டெக்னாலஜியில் மட்டும் கவனம் செலுத்திய இயக்குனர், கதையிலும் கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்கலாம். இருந்தாலும், இன்றைய மாடர்ன் யுவன், யுவதிகளுக்கு நிச்சயம் இந்த கீ பிடித்தமானதாக இருக்கும்.