twitter
    Tamil»Movies»KGF Chapter 1
    கே ஜி எஃப் (சேப்டர் 1)

    கே ஜி எஃப் (சேப்டர் 1)

    U/A | Action
    Release Date : 21 Dec 2018
    3/5
    Critics Rating
    3.5/5
    Audience Review
    கே ஜி எஃப் (சேப்டர் 1) தமிழ், கன்னட, தெலுங்கு, ஹிந்தி மற்றும் மலையாளம் போன்ற மொழிகளிலும்  தயாராகி உள்ள வரலாற்றுமிக்க அதிரடி திரைப்படம். இத்திரைப்படத்தை இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்க, யஷ்,  ஸ்ரீநிதி ஷெட்டி, தமன்னா, மௌனி ராய் மற்றும் பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இத்திரைப்படத்திற்கு தயாரிப்பாளர் விஜய் கிரகண்டுர் தயாரிப்பில், இசையமைப்பாளர் ரவி பஸ்ரூர் இசையமைத்துள்ளார். மேலும் புரட்சி தளபதி விஷாலின் விஷால் பிலிம் பேக்டரி (வி எஃப் எஃப்)  தமிழில் இப்படத்தினை வெளியிட்டுள்ளது. 

    மேலும் படத்தில்1980 மற்றும் 2018 ஆம் ஆண்டு, என்று இரு...
    • பிரசாந்த் நீல்
      பிரசாந்த் நீல்
      Director
    • விஜய் கிரகண்டுர்
      விஜய் கிரகண்டுர்
      Producer
    • விஷால் கிருஷ்ணா
      விஷால் கிருஷ்ணா
      Producer
    • ரவி பஸ்ரூர்
      ரவி பஸ்ரூர்
      Music Director
    • tamil.filmibeat.com
      3/5
      அசால்ட்டான உடல் மொழி, திமிரு பிடித்த பார்வை, எதையும் துணிந்து செய்யும் நெஞ்சுறும், யாருக்கும் பயப்படாத மன தைரியும்... இது தான் ராக்கி கதாபாத்திரம். மிக கச்சிதமாக செய்திருக்கிறார் கன்னடத்தின் ராக்கிங் ஸ்டார் யாஷ். ஒவ்வொரு அடியும் இடி மாதிரி விழுகிறது. காதல், கருணை, கோபம், வெறி, நிதானம் என நடிப்பில் அசத்துகிறார்.

      படத்தின் மற்றொரு ஹீரோ ஒளிப்பதிவாளர் புவன் கவுடா. கோலார் தங்க வயல் காட்சிகள் எல்லாம், அந்த இடத்தை அப்படியே நம் கண்முன் நிறுத்துகின்றன. குழப்பமான திரைக்கதையை தனது தெளிவான எடிட்டிங்கால் நேர்க்கோட்டில் பயணிக்க வைத்திருக்கிறார் படத்தொகுப்பாளர் ஸ்ரீகாந்த்.

      ஆனாலும் மேக்கிங்கில் அசத்தியிருக்கிறார்கள். கோலார் தங்க சுரங்கத்தை அச்சு அசலாக கண்ணில் காட்டியதற்காக, இந்த கேஜிஎப் - ஐ வரவேற்போம்...