twitter
    Tamil»Movies»KGF Chapter 1»Critics Review

    விமர்சகர்கள் கருத்து

    • அசால்ட்டான உடல் மொழி, திமிரு பிடித்த பார்வை, எதையும் துணிந்து செய்யும் நெஞ்சுறும், யாருக்கும் பயப்படாத மன தைரியும்... இது தான் ராக்கி கதாபாத்திரம். மிக கச்சிதமாக செய்திருக்கிறார் கன்னடத்தின் ராக்கிங் ஸ்டார் யாஷ். ஒவ்வொரு அடியும் இடி மாதிரி விழுகிறது. காதல், கருணை, கோபம், வெறி, நிதானம் என நடிப்பில் அசத்துகிறார்.

      படத்தின் மற்றொரு ஹீரோ ஒளிப்பதிவாளர் புவன் கவுடா. கோலார் தங்க வயல் காட்சிகள் எல்லாம், அந்த இடத்தை அப்படியே நம் கண்முன் நிறுத்துகின்றன. குழப்பமான திரைக்கதையை தனது தெளிவான எடிட்டிங்கால் நேர்க்கோட்டில் பயணிக்க வைத்திருக்கிறார் படத்தொகுப்பாளர் ஸ்ரீகாந்த்.

      ஆனாலும் மேக்கிங்கில் அசத்தியிருக்கிறார்கள். கோலார் தங்க சுரங்கத்தை அச்சு அசலாக கண்ணில் காட்டியதற்காக, இந்த கேஜிஎப் - ஐ வரவேற்போம்.