twitter

    கே ஜி எஃப் (சேப்டர் 1) கதை

    கே ஜி எஃப் (சேப்டர் 1) தமிழ், கன்னட, தெலுங்கு, ஹிந்தி மற்றும் மலையாளம் போன்ற மொழிகளிலும்  தயாராகி உள்ள வரலாற்றுமிக்க அதிரடி திரைப்படம். இத்திரைப்படத்தை இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்க, யஷ்,  ஸ்ரீநிதி ஷெட்டி, தமன்னா, மௌனி ராய் மற்றும் பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இத்திரைப்படத்திற்கு தயாரிப்பாளர் விஜய் கிரகண்டுர் தயாரிப்பில், இசையமைப்பாளர் ரவி பஸ்ரூர் இசையமைத்துள்ளார். மேலும் புரட்சி தளபதி விஷாலின் விஷால் பிலிம் பேக்டரி (வி எஃப் எஃப்)  தமிழில் இப்படத்தினை வெளியிட்டுள்ளது. 

    மேலும் படத்தில்1980 மற்றும் 2018 ஆம் ஆண்டு, என்று இரு காலக்கட்டங்கள் காட்டப்படுகிறது. இரு காலக்கட்டத்திலும் பல்வேறு கதாபாத்திரங்கள் அறிமுகப்படுத்தபடுகிறது. இதை இயக்குநர் சரியாக கையாண்டதால் திரைக்கதை விறுவிறுப்பாக நகர்கிறது. அடுத்து என்ன நடக்கும் என்ற ட்வீஸ்ட் படம் முழுமையிலும் உள்ளது.

    கதை  
    சாதாரண குடும்பத்தை சேர்ந்த ராக்கி (யஷ் ) என்ற துறுதுறு இளைஞர், தன் தாயின் கட்டளை படி, வாழ்க்கையில் தான் பணம் மற்றும் அதிகாரம் படைத்த நபராக மரணம் அடைய வேண்டும் என்று ஆசைப்படுகிறார். தன் தாயின் இறப்பிற்கு பின்னர் பெங்களூரிலிருந்து வெளியேறி மும்பை தெருக்களில் சுற்றித்திரிந்த ராக்கி கொடுரமான ரௌடியாக சித்தரிக்கப்படுகிறார், இவரின் பெயர் எட்டுத்திக்கும் பரவ, இதன் காரணமாக இவருக்கே தெரியாமல் பலர் சூழ்ச்சியால் கோலார் தங்க வயலுக்குள் வருகிறார். 

    கன்னட நடிகர் யாஷ், ராக்கி கதாபாத்திரல் நடித்துள்ளார். இந்த கதாபாத்திரத்திற்கு வேறு யாரும் இதுபோல பொருந்தியிருக்க வாய்ப்பில்லாத அளவுக்கு நடித்துள்ளார். படத்தின் முதல் பாகம் சற்று நீளமாக இருந்தாலும் கதைக்கு தேவைப்படுவதாக உள்ளது. 

    இவர் படத்தின் இரண்டாம் பாகத்தில் ஒரு மிஷனை கையில் எடுக்கிறார். 1980 ஆண்டுக்கு முன்னோக்கி செல்லும் அவருக்கு கொடுக்கப்படும் மிஷனே கோலார் தங்க வயலின் அதிகாரம் படைத்த நபரை கொள்வதுதான். அந்த மிஷன் முடிவில் அவர் கொடுரமான வில்லனாக சித்தரிக்கப்படுகிறார். அந்த மிஷனில் என்ன நடக்கிறது என்பதே கதை.

    **Note:Hey! Would you like to share the story of the movie கே ஜி எஃப் (சேப்டர் 1) with us? Please send it to us ([email protected]).