twitter
    Tamil»Movies»Kolamaavu Kokila»Critics Review

    விமர்சகர்கள் கருத்து

    • நயன்தாராவை வைத்து இந்த படத்தை எடுத்த இயக்குனர் நெல்சனுக்கு முதல் பாராட்டுக்கள். ஹீரோயினை வைத்தே ஹீரோயிசம் காட்ட முடியும் என அசால்ட் செய்திருக்கிறார். தாயை காப்பாற்ற எந்த தூரத்துக்கும் செல்லும் பழைய ஹீரோ கதையில் ஹீரோயின். சண்டைக்காட்சிகள் இல்லை. குத்து பாடல் இல்லை. ஹீரோ மாஸ் இல்லை. நயன்தாராவை முன்னிறுத்தி என்ன செய்தால், மக்கள் ஏற்பார்களோ, அதை கச்சிதமாக செய்திருக்கிறார்.

      அறம் படத்திற்கு பிறகு நயன்தாராவுக்கு மிக முக்கியமான படம் கோலமாவு கோகிலா. தன்னால் தனியாளாக சீரியஸான ரோல் மட்டுமல்ல, காமெடி கலந்து திரில்லிங் படத்தையும் தர முடியும் என நிரூபித்திருக்கிறார் நயன்தாரா. வெல்டன் லேடி சூப்பர் ஸ்டார்.

      அதே நேரத்தில் 'நானும் ரவுடி தான் காதும்மாவை' அப்பப்போ நினைவுப்படுத்துகிறார். இருந்தாலும் 'இது ஓகே பேபி'. ஆனால் நயன்தாராவுக்கே உரித்தான காஸ்ட்யும் சென்ஸ் இதில் மிஸ்சிங். படம் முழுக்க ஒரே மாதிரியான லாங் ஸ்கர்ட், கை வெச்ச சட்டையுடன் தோன்றுவது அன்லைக் செய்ய வைக்கிறது. அறம் படத்தில் அந்த வாய்ப்பு இல்லை. ஆனால் இதில் அது இருந்தும் பயன்படுத்தவில்லை.

      நயன்தாராவுக்கு பிறகு இயக்குனர் அதிகம் நம்பிருப்பது யோகி பாபுவை தான். அதற்கு தகுந்த நியாயம் செய்திருக்கிறார். அன்புதாசனுடன் சேர்ந்து யோகி பாபு செய்யும் கலாட்டாக்கள், இரண்டாம் பாதி படத்தை அதிவேக காமெடி எக்ஸ்பிரசாக மாற்றி இருக்கிறது. நீங்க வேற லெவல் புரோ.