twitter
    Tamil»Movies»Koothan»Critics Review

    விமர்சகர்கள் கருத்து

    • டி.ராஜேந்தர் குரலில் 'மங்கிஸ்தா கிங்கிஸ்தா' செம குத்து குத்த வைக்கிறது. கூத்தனம்மா கூத்து, காதல் காட்டுமிராண்டி பாடல்கள் கேட்பதற்கு மிக அருமை. சொல்லாத சொல்லாத, தீராத தீண்டல்கள் பாடல்கள் நல்ல மெலடிக்கள். பாடல்களை சிறப்பாக கொடுத்த இசையமைப்பாளர் பால்ஸ் ஜி, பின்னணி இசையில் சொதப்பியிருக்கிறார்.

      ஏற்கனவே நாம் பார்த்து பழகிய அதே டான்ஸ் பட டெம்ப்ளேட்டில் மற்றொரு படமாக வந்திருக்கிறான் இந்த கூத்தன். காதல், சென்டிமெண்ட், காமெடி, நிறைய டான்ஸ் என ஒரு முழுமையான கமர்சியல் படத்தை எடுத்திருக்கிறார் இயக்குனர் ஏ.எல்.வெங்கி.

      வில்லனாக புதிய அவதாரம் எடுத்திருக்கும் நாகேந்திர பிரசாத்தை தமிழ் சினிமா வரவேற்கிறது. படத்தின் கதை களம் தனது ஏரியா என்பதால், இறங்கி அடித்திருக்கிறார். இன்னும் கொஞ்சம் எக்ஸ்பிரஷன்ஸ்களை மெருகேற்றினால் நல்ல கம்பேக்காக இருக்கும் நாகு.

      தனது வழக்கமான நடிப்பால் படத்தை ஓரளவுக்கு தாங்கி பிடிக்கிறார் ஊர்வசி. அதேபோல ஸ்ரீ ரஞ்சனியும் நிறைவாக செய்திருக்கிறார். இவர்களை தவிர, பாக்யராஜ், மனோபாலா, ராம்கி, கலா மாஸ்டர், ஜூனியர் பாலையா, கவிதாலயா கிருஷ்ணன், சஞ்சய் அஸ்ரானி, ஆடம்ஸ், பிரியதர்ஷினி, ரம்யா என ஒரு நட்சத்திர பட்டாளமே இருக்கிறது. எல்லோருமே ஊறுகாய் போல ஒவ்வொரு காட்சியில் வந்துவிட்டு போகிறார்கள்.

      கூத்தன் என்றால், கூத்து எனும் ஆடல் கலையில் வல்லவன் என்று பொருள் கூறுகிறது விக்கிபீடியா. ஆனால் இந்த கூத்தன் வல்லவன் இல்லை. கூத்தன் படம் பார்ப்பவர்களில் 18 பேருக்கும் குலுக்கல் முறையில் ஒரு பவுன் தங்கம் பரிசாக வழங்கப்படும் என அறிவித்துள்ளார் இப்படத்தின் தயாரிப்பாளர் நீல்கிரிஸ் முருகன். எனவே படத்தை பார்த்து தங்கம் வெல்வதா வேண்டாமா என்பதை நீங்களே முடிவு செய்துகொள்ளுங்கள்.