twitter
    Tamil»Movies»Kudimagan»Critics Review

    விமர்சகர்கள் கருத்து

    • தமிழ்நாட்டில் இன்று பல வீடுகளில் நாம் பார்க்கும் காட்சிகளை திரையில் கொண்டு வந்திருக்கிறார் இயக்குனர் சத்தீஸ்வரன். மது பழக்கம் ஒரு குடும்பத்தை எந்த அளவுக்கு சீரழிக்கிறது என்பதை மிகையில்லாமல் காட்டியிருக்கிறார். இதனால் அவசியமான ஒரு காலகட்டத்தில், மிகவும் அவசியமான ஒரு படமாக வந்துள்ளது குடிமகன்.

      மதுவுக்கு எதிரான சில வசனங்கள் மிகவும் அழுத்தமாக உள்ளன. கந்தன் குடிகாரனான பிறகு, அவனது குடும்பம் படும் கஷ்டங்கள் நம்மை உருக வைக்கின்றன. படம் பார்த்து வெளியே வரும் குடிகாரர்கள், அன்றைய ஒரு நாளாவது குடிக்காமல் இருப்பது நிச்சயம். நாயகனாக நடித்துள்ள ஜெய்குமார், புதுமுகம் என்றாலும் யதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். ஒரு தகப்பனாக, கணவனான, குடிக்காரனாக தனது கடமையை சிறப்பாக செய்திருக்கிறார்.

      படத்தின் மிகப் பெரிய சர்ப்ரைஸ் குட்டி பையன் ஆகாஷ். சமூக சேவைக்காக ஏற்கனவே அறியப்பட்ட இந்த சுட்டி பையன், திரையில் மதுவுக்கு எதிராக பிரச்சாரம் செய்து கலக்கியிருக்கிறான். சிறப்பாக நடித்து ஸ்கோர் செய்கிறான்.