TamilbredcrumbMoviesbredcrumbLakshmibredcrumbCritics Review

    விமர்சகர்கள் கருத்து

    • ஒரு டான்ஸ் ரியாலிட்டி ஷோவை இரண்டரை மணி நேர படமாக தந்திருக்கிறார் இயக்குனர் விஜய். இந்தியா முழுவதும் இருந்து எக்கச்சக்க திறமையான டான்ஸ் குழந்தைகளை ஆட வைத்து, டிஆர்பியை ஏற்றியிருக்கிறார். சுட்டி சிறுமி தித்யா, லக்ஷ்மி கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்துகிறார். தித்யாவின் ஒவ்வொரு டான்ஸ் மூவ்மெண்டும் கைத்தட்டல்களை அள்ளிக் குவிக்கிறது. டான்ஸ் மட்டுமின்றி, தித்யாவின் குறும்புத்தனங்களும் ஆடியன்சிடம் அப்ளாஸ் அள்ளுகிறது.

      ஐஸ்வர்யா ராஜேஷுக்கு பர்பாமென்ஸ் காட்ட வேண்டிய வேலைகள் எதுவும் இல்லை. அம்மாவாக மட்டுமே வந்து போகிறார். இவர்களை தாண்டி வில்லனாக அறிமுகமாகும் சல்மான் யூசப் கானின் நடனம் வாவ் சொல்ல வைக்கிறது. அதேபோல தித்யா டீமில் உள்ள குண்டுப் பையன் அர்னால்டின் (அஸ்வத்) ஆட்டம் அசரவைக்கிறது.

      எளிதில் யூகிக்கக் கூடிய வகையில் திரைக்கதை அமைக்கப்பட்டிருப்பதால், ரியால்டி ஷோவின் சுவாரஸ்யம் மிஸ்சிங். படம் ஏபிசிடி பார்ட் 2 போலவே இருக்கிறது. பிளாஷ் பேக் காட்சியும் வலுவாக இல்லாததால், பிரபுதேவா - ஐஸ்வர்யா ராஜேஷ் உறவின் ஆழம் தெளிவாகாமல் போகிறது.

      'இதுவரை ஜெயிச்சதே இல்லாத மாதிரி பிராக்டீஸ் பண்ணு, இதுவரை தோத்ததே இல்லாத மாதிரி பெர்ஃபார்ம் பண்ணு' உள்ளிட்ட அஜயன் பாலாவின் மோட்டிவேஷன் வசனங்களுக்கு தனி பாராட்டுக்கள். நிரவ் ஷாவின் ஒளிப்பதிவும், ஆண்டனியின் எடிட்டிங்கும் எமோஷனலான டான்ஸ் சினிமாவை கச்சிதமாக தந்துள்ளன.