TamilbredcrumbMoviesbredcrumbMaanikbredcrumbCritics Review

    விமர்சகர்கள் கருத்து

    • சிங்கிள் ஹீரோ படம் என்பதால் மிகுந்த மெனக்கெடலுடன் நடித்திருக்கிறார் மா.கா.பா.ஆனந்த். துறுதுறுப்பான அவரது நடிப்பு கவர்கிறது. படத்தின் கதை களம் அவருடைய ஏரியா என்பதால், நிறுத்தி நிதானமாக விளையாடி செஞ்சுரி அடிக்க முயன்றிருக்கிறார். ஆனால் 25 ரன்களில் பரிதாபமாக கேட்சு கொடுத்து அவுட்டாகிறார். அடுத்த மேட்சில் நல்லா பெர்பார்ம் பண்ணுங்க மா.கா.பா. சூசா குமார் படம் முழுக்க அழகு தேவதையாக வருகிறார். காதலிப்பதை தவிர வேறு வேலை இல்லை. அவரது அப்ப இறக்கும் காட்சி அனைவரையும் சிரிக்க வைக்கிறது.

      கவுரவ வேடத்தில் வரும் யோகி பாபு சில நிமிடங்கள் சிரிக்க வைக்கிறார். மனோபாலா, மதுமிதா சிரிக்க வைக்க முயற்சித்து இருக்கிறார்கள். நம்மை நன்றாக சிரிக்க வைத்திருந்தால், இந்த 'மாணிக்' - ஐ நாம் பாட்ஷாவாக கொண்டாடியிருக்கலாம்.