twitter
    Tamil»Movies»Madras»Story

    மெட்ராஸ் கதை

    மெட்ராஸ் 2014ஆம் ஆண்டு திரைக்கு வந்த தமிழ் மொழித் திரைப்படமாகும். இந்தத் திரைப்படத்தை பா. ரஞ்சித் இயக்கியுள்ளார். கதாநாயகனாக கார்த்திக் மற்றும் கதாநாயகியாக கேத்ரின் திரேசா நடித்துள்ளார்கள். இந்தத் திரைப்படத்தைத் ஸ்டுடியோ கிரீன்  நிறுவனம் தயாரித்துள்ளது.

    இந்தத் திரைப்படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார் மற்றும் ஜி. முரளி ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்தத் திரைப்படம் 26 செப்டம்பர் 2014ஆம் ஆண்டு வெளியானது.

    கதை

    காளி (கார்த்தி) முன்கோபியான நடுதர வர்க்க பையன். இவர் ஒரு மிக பெரிய நிறுவனத்தில் வேலை பார்ப்பவர். மற்ற நேரங்களில் கால்பந்து விளையாடுவார். அவரின் நெருங்கிய நண்பர் அன்பு (கலையரசன்) ஒரு இளம் அரசியல் பேராவல். காளி தன் நண்பர்களுடன் வியாசர்பாடியில் வசிக்கிறார். அன்பு அங்குள்ள பகுதியின் தலைவருக்கு எதிராளியாக உள்ள மாரி (வினோத்)-யிடம் வேலை செய்கிறார். காளி,  கலையரசி (கேத்ரின் திரேசா) மீது காதல் வாய்படுகிறார். கலையரசியும் ஒப்புக்கொள்கிறார்.

    ஒரு கட்டத்தில் தேர்தல் வருகிறது. அன்பு எதிர் கட்சி வசம் உள்ள சுவரை இம்முறை  மாரிக்காக அடையவேண்டும் முயற்சிக்கிறார். ஆனால், எதிர்பாராத விதமாக  அன்பு கொலைசெய்யப்படுகிறார். காளி, அன்பு-டைய மரணத்திற்கு  காரணமானவர்கள் எதிராளி கூட்டை சேர்ந்தவர் என்று எண்ணி காளி அவர்களை பழிவாங்க நினைக்கிறார். ஆனால் அவரின் பழிவாங்கும் எண்ணத்தை மாற்ற அவருடைய பெற்றோர் காளிக்கும், கலையரசிக்கும் நிச்சயம் செய்கின்றனர்.

    அதே சமயத்தில், அன்பு-டைய மரணத்திற்கு மாரிதான் காரணம் என்று அறிகின்ற காளி மாரியையும்  அங்குள்ள சுவரையும்  என்ன செய்கின்றார் என்பது மீதி கதை.
    **Note:Hey! Would you like to share the story of the movie மெட்ராஸ் with us? Please send it to us ([email protected]).