மஹா கதை

    மஹா அறிமுக இயக்குனர் யு ஆர் ஜமீல் இயக்கத்தில் ஹன்ஷிகா நடிக்கும் அதிரடி த்ரில்லர் திரைப்படம். இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். இத்திரைப்படம் ஹன்ஷிகாவிற்கு 50 -வது திரைப்படமாகும்.

    இத்திரைப்படத்தின் பெயரில் பத்து ஆண்டுகளுக்கு முன்னர் அஜித் நடித்தார். ஆனால், ஏதோ காரணத்தினால், அப்படம் நிறுத்தப்பட்டத்து. தற்போது அந்த பெயர் தான் ஹன்சிகாவின் படத்துக்கு கிடைத்துள்ளது.
     
    இத்திரைப்படத்தில் நடிகர் சிலம்பரசன் கவுரவத் தோற்றத்தில் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார். இதற்காக 7 நாட்கள் கால் சீட்-ஐ தந்துள்ளார். ஏற்கனவே போஸ்டர்களால் இத்திரைப்படம் சர்ச்சையில் சிக்கியுள்ளது. இந்நிலையில் சிலம்பரசன் - ஹன்ஷிகா ஜோடியானது இந்த படத்திற்கு மேலும் எதிர்பார்ப்புகளை தந்துள்ளது.

    இத்திரைப்படத்தில் ஸ்ரீகாந்த் கதாநாயகனாக நடிக்கிறார், சிலம்பரசன் ஹன்ஷிகாவின் பிளாஷ் பேக் காதலர் கதாபாத்திரத்தில் நடிப்பார் எனவும் அல்லது ஒரே ஒரு பாடலுக்கு கௌரவ தோற்றத்தில் வருவார் என தகவல்கள் வெளிவந்துள்ளது. ஆனால் சிலம்பரசனின் கதாபாத்திரத்தை பற்றிய தகவல்கள் படக்குழுவினரால் அதிகாரப்பூர்வமான அறிவிப்புகள் எதுவும் வெளிவரவில்லை. 
    **Note:Hey! Would you like to share the story of the movie மஹா with us? Please send it to us (popcorn@oneindia.co.in).