twitter
    Tamil»Movies»Manal Kayiru 2»Critics Review

    விமர்சகர்கள் கருத்து

    • மணல் கயிறு முதல் பாகம் பார்த்திருக்கிறீர்களா? தான் திருமணம் செய்து கொள்ளப் போகும் பெண்ணுக்கு 8 நிபந்தனைகள் வைத்து அட்ராசிட்டி பண்ணும் கிட்டுமணியை (எஸ்வி சேகர்) சாமர்த்தியமாக ஏமாற்றி, அந்த எட்டு நிபந்தனைகளுக்குமே பொருந்தாத ஒரு பெண்ணைக் கட்டி வைத்து, ஜகஜ்ஜால வேலை பார்ப்பார் நாரதர் நாயுடுவாக வரும் விசு.

      இப்போது அதன் தொடர்ச்சி...

      இரண்டாம் பாகம் என்றால்... இது பக்காவான இரண்டாம் பாகம். புத்திசாலித்தனமாக திரைக்கதையின் தொடர்ச்சியைப் பின்னியிருக்கிறார்கள்

      அஸ்வின், ஜெகன், ஜார்ஜ் கூட்டணியில் உருவாகி வெளியாகும் அந்த விளம்பர வீடியோக்கள் செம கலகல.

      அஸ்வின் இந்தப் படத்தில் தேறிவிட்டார். எஸ்வி சேகரைப் போலவே டைமிங் காமெடி செய்யவும் முயற்சித்திருக்கிறார். எஸ்வி சேகர், விசு, சுவாமிநாதன், சாம்ஸ் ஆகிய இந்த நால்வரும் படத்துக்கு பலம். குறிப்பாக விசு. 34 ஆண்டுகள் கழித்து வரும் ஒரு படத்தின் இரண்டாம் பாகத்திலும், அந்த முதல் பாகத்தில் தந்த கலகலப்பைத் தவறவில்லை மனிதர்.

      நாயகி பூர்ணாவுக்கு கச்சிதமான வேடம், நல்ல நடிப்பைத் தந்திருக்கிறார். அழகு, நல்ல நடிப்புத் திறமை எல்லாம் இருந்தும் ஏன் இத்தனை நாட்களாக இவர் க்ளிக்காகவில்லை என்று தெரியவில்லை.

      முதல் பாகத்தில் நடித்த சாந்தி கிருஷ்ணா வேடத்தில் ஜெயஸ்ரீ. பிரமாதமாக நடித்திருக்கிறார்.

      'சுதந்திரத்திற்கும், விடுதலைக்கும் வித்தியாசம் இருக்கிறது. எது தனி மனித சுதந்திரம்.. எது கடமை என்பதை தம்பதிகள் புரிந்து கொள்ள வேண்டும். இதைச் செய்தாலே குடும்பத்தில் குழப்பமும் வராது.. டைவர்ஸ் என்கிற பேச்சும் வராது' - இது படத்தில் விசு சொல்லும் வசனம். இந்தத் தலைமுறை மனதில் கொள்ள வேண்டிய வசனம்.

      மணல் கயிறு முதல் பாகத்தை சரியாக உள்வாங்கிக் கொண்டு சரியாகவே இரண்டாம் பாகத்துக்கான திரைக்கதை அமைத்திருக்கிறார் எஸ்வி சேகர். இயக்குநர் மதன்குமார் அதை கலகலப்பாக காட்சிப்படுத்தியுள்ளார். ஆனால் முதல் பாதியை விட நாடகத்தனம் அதிகமாகவே தெரிகிறது இரண்டாம் பாகத்தில். அதைத் தவிர்த்திருக்கலாம்.