விமர்சகர்கள் கருத்து

    • தனிஒருவன் படத்தின் அரவிந்த்சாமியின் அப்பாவி தந்தையாக நடித்திருப்பார் தம்பி ராமையா. சிறிய கதாபாத்திரமான அதை அப்படியே முழுபடத்துக்கான கேரக்டராக மாற்றியிருக்கிறார். சூதுவாது தெரியாமல் வெகுளிதனமாக தம்பி ராமையா செய்யும் செயல்கள், சிரிப்பு, பிரதாபம், கோபம், பாவம் என மிக்ஸ்டு ரியாக்ஷன்களை வரவைக்கிறது.

      படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள், இசை, இயக்கம் என அனைத்தையுமே செய்திருப்பவர் தம்பி ராமையா தான். ஒரு குடும்பத்தில் தந்தை சரியில்லை என்றால் அது என்ன விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை அழமான காட்சியமைப்புகளின் வழியே பார்வையாளர்களுக்கு கடத்துகிறார்.

      கணவன் ஊதாரியாகவே இருந்தாலும் அவரது மனம் கோணாமல் பார்த்துக்கொள்ளும் பெண்கள் ஒருபக்கம். கணவனின் கட்டளைக்கு கட்டுப்பட்டு பிறந்த வீட்டுடன் உறவு பாராட்ட முடியாமல் தவிக்கும் பெண்கள் மற்றொரு பக்கத்தின். இதற்கிடையில், ஒரு பெண் நினைத்தால் ஆண்களை திருத்தி குடும்பத்தை நிலைநிறுத்த முடியும் என துணிச்சலாக களமிறங்கும் நவீன யுவதிகள் என மூன்று விதமான பெண்களையும் படத்தில் காட்டியிருக்கிறார் தம்பி ராமையா. இதற்காக தனித்தனியாக காட்சிகளை வைக்காமல், கதையினூடே அதை விளக்கிய விதம் சூப்பர்.