twitter

    மணியார் குடும்பம் கதை

    மணியார் குடும்பம் இயக்குனர் தம்பி ராமையா இயக்கத்தில், உமாபதி ராமையா, மிருதுளா முரளி, சமுத்திரக்கனி, தம்பி ராமையா, ராஜேந்திரன் மற்றும் பலர் நடித்த நகைச்சுவை, காதல் திரைப்படம். இத்திரைப்படத்த்தினை இயக்கியது மட்டுமில்லாமல் தானே இசையமைத்துள்ளார் தம்பி ராமையா. 

    கதை : 

    மணியார் குடும்பத்தின் கதை ராராபுரம் ஊரின் பெரிய குடும்பம் இந்த மணியார் குடும்பம் தான். அப்பா சொத்தை குட்கார்ந்து தின்றே காலி செய்யும் நார்த்தங்காசாமிக்கு (தம்பி ராமையா), தினமும் காலையில் எழுந்து குளித்து முடித்து, டிபன் சாப்பிட்டுவிட்டு தின்னையில் அமர்ந்து வெட்டிக்கதை பேசுவது தான் வழக்கமான பணி. குடும்பத்தின் மாத செலவுக்கு வீட்டின் கதவுகளை விற்கும் அளவுக்கு தான் நிலைமை. ஆனால் அதை பற்றி எல்லாம் அலட்டிக்கொள்ளாமல் வெள்ளை வேட்டி சட்டையில் பந்தாவாக பழைய பண்ணையார் கெட்டப்பிலேயே திரிகிறார்.

    அப்பாவுக்கு தப்பாமல் இருக்கும் மகன் குட்டிமணியும் (உமாபதி) குடித்துவிட்டு ஊதாரித்தனமாக ஊரை சுற்றி திரிகிறார். தாய் மாமன் விவேக் பிரசன்னாவுடன் சேர்ந்து ஊருக்குள் அலப்பறை செய்கிறார். வேலை வெட்டி இல்லாத வெட்டி பையன் உமாபதியை உயிருக்கு உயிராக காதலிக்கிறார் அவரது அத்தை மகள் மகிழம்பூ (மிருதுளா முரளி). தந்தையின் எதிர்ப்பையும் மீறி ஊதாரியாக இருக்கும் உமாபதியை திருத்தி, கல்யாணம் செய்ய திட்டம் தீட்டுகிறார். அது என்ன ஆனது என்பது தான் க்ளைமாக்ஸ்.
    **Note:Hey! Would you like to share the story of the movie மணியார் குடும்பம் with us? Please send it to us ([email protected]).