விமர்சகர்கள் கருத்து

  • தமிழ்நாட்டில் நாம் தினமும் செய்தியில் பார்க்கும் செயின் பறிப்பு சம்பவங்களுக்கு பின் இருக்கும் வலியையும், வேதனையையும் திரில்லிங் திரைக்கதையில் சொல்லியிருக்கிறார் இயக்குனர் ராஹேஷ். இரவில் நடமாட பெண்கள் பயந்த காலம் போய், இன்று பகலிலேயே பாதுகாப்பு இல்லை என்பதை உறக்க சொல்லியிருக்கிறார்.

   நல்ல கதை கரு, வசனங்கள் இருந்தாலும், படத்தின் திரைக்கதையில் இயக்குனர் இன்னும் கவனம் செலுத்தியிக்கலாம். முதல் இரண்டு மூன்று காட்சிகளிலேயே கதையை யூகித்துவிட முடிகிறது. ஆனால் சொல்ல வந்த விஷயத்தை நேர்த்தியாகவும், நேர்மையாகவும் சொல்லியிருக்கிறார். சில காட்சிகள் 'மெட்ரோ' படத்தை நினைவூட்டுகிறது. ஆனால் அந்த படம் அளவுக்கு செயின் பறிக்கும் நுட்பங்கள் குறித்து வகுப்பெடுக்காமல் இருந்ததற்கும், ஆபாசம் இல்லாமல் படத்தை கொடுத்ததற்கும் நன்றி.

   போலீஸ் வேலையில் சேர்வதற்காக பயிற்சி எடுக்கும் பாரதியாக ஐஸ்வர்யாக தத்தா. ஒரு சில காட்சிகள் தான் என்றாலும் நிறைவாக செய்திருக்கிறார். பிக் வீட்டில் இருக்கும் அவருக்கு படம் ரிலீசானது தெரியாமல் இருக்கலாம். ஆனால் அந்த வீட்டுக்குள் இருப்பதாலேயே, ஐஸ்வர்யா தத்தாவை உடனடியாக அடையாளம் கண்டுகொள்கின்றனர் ரசிகர்கள்.

   ஹீரோ யார், எதற்காக இதையெல்லாம் செய்கிறார் என்பதை பார்வையாளர்கள் யூகித்துவிட கூடாது என்பதற்காக படத்தில் நிறைய கேரக்டர்களை சேர்க்கிறார் இயக்குனர். பெண்களின் மிகப்பெரிய சந்தோஷமாக விளங்கும் தங்க நகைகளை அவர்கள் தைரியமாக அணிய முடியாதபடி செய்கிறார்களே என்ற ஆதங்கத்தையும் வெளிப்படுத்தி இருக்கிறார். சிசிடிவி கேமராவின் அவசியத்தையும் சொல்கிறது மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன.