twitter
    Tamil»Movies»Mehandi Circus»Critics Review

    விமர்சகர்கள் கருத்து

    • வட இந்திய பெண்ணாகவே படம் முழுவதும் வருவதால், அந்த கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்துகிறார் ஸ்வேதா திரிபாதி. சர்க்கஸ், காதல், வேதனை என ஒவ்வொரு காட்சியிலும் நன்றாக நடித்துள்ளார்.

      ஆர்ஜே விக்னேஷ்காந்தின் காமெடி பல இடங்களில் ஒர்க்கவுட் ஆகியிருக்கிறது. சில வசனங்களில், அவரையும் மீறி ராஜூ முருகன் தான் வெளியே தெரிகிறார். சர்ச் பாதர் வேல.ராமமூர்த்தி, அஞ்சுர் விகாஷ், மாரிமுத்து, பூஜா, சன்னி சார்லஸ் என அனைவருமே தங்கள் பங்களிப்பை சரியாக செய்திருக்கிறார்கள்.

      தலைப்பை தவிர வேறு எந்த புதிய ஆச்சரியங்களும் இல்லாமல், ஏற்கனவே பார்த்த பல படங்களின் கலவையாக தான் வந்திருக்கிறது மெஹந்தி சர்க்கஸ். இடைவெளி காட்சியும், க்ளைமாக்ஸ் காட்சியும், யதார்த்தமாக நகரும் படத்தை, அப்படியே கமர்சியல் சினிமாவாக மாற்றிவிடுகின்றன. எளிதில் யூகிக்கக் கூடிய திரைக்கதையும் படத்தின் மிகப் பெரிய பலவீனம்.

      சர்க்கஸ் வித்தை காட்டி, புதிய கிளாஸில் பரிமாறப்பட்ட பழைய ஒயின் இந்த 'மெஹந்தி சர்க்கஸ்'.