twitter
    Tamil»Movies»Mohini»Critics Review

    விமர்சகர்கள் கருத்து

    • முதல் முறையாக இரண்டு வேடங்களில் திரிஷா. ஒவ்வொரு காட்சியிலும் தன் அழகு மற்றும் நடிப்பால் படத்தைத் தாங்கிப் பிடிக்கிறார். நடிப்பில் நல்ல முதிர்ச்சி தெரிகிறது. ஆனால், நடிப்பில் காட்டிய கவனத்தை, கதையைத் தேர்வு செய்ததிலும் கொஞ்சம் காட்டியிருக்கலாம். அப்படி செய்திருந்தால் நிச்சயம் இப்படம் அவர் திரை வாழ்க்கையில் முக்கிய படமாக இருந்திருக்கும். இதற்கு முன்பு வெளிவந்த நாயகி படம் படுதோல்வி அடைந்தும் கூட கதை தேர்வில் கவனம் காட்டாதது தான் திரிஷாவின் தவறு. மத்தபடி, இயக்குநர் சொன்னதை அப்படியே நடித்துக் கொடுத்திருக்கிறார்.

      படம் முழுவதும் திரிஷாவின் நடிப்பே ஆக்கிரமிப்பதால், பாலிவுட்டில் இருந்து இப்படம் மூலம் நாயகனாக அறிமுகமாகியுள்ள ஜாக்கி நம் மனதில் பதியவில்லை. இது ஒரு ஹீரோயின் சென்ட்ரிக் படம் என்பதால், வழக்கமாக நடிகைகள் செய்யும் வேலையை ஜாக்கி இப்படத்தில் செய்திருக்கிறார். இரண்டு பாடலுக்கு திரிஷாவுடன் நடனம், கொஞ்சம் காட்சிகள், அவ்வளவுதான் ஜாக்கிக்கு படத்தில் வேலை.

      யோகிபாபுவிற்கு இருக்கும் கிரேஸை பயன்படுத்திக் கொள்வதாக நினைத்து, அவரை அதிகம் பேச வைத்து எரிச்சல் படுத்தியிருக்கிறார் இயக்குநர். அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு பாஸ். இது ஒருபுறம் என்றால் லண்டன்வாசிகளாக மதுமிதா - கணேஷ்கரின் ஓவர் ஆக்டிங் 'வேண்டாம் மிடியல.. அழுதுருவேன்' என ரசிகர்களைக் கதற வைக்கிறது.

      ரூம் போட்டு யோசித்து தாறுமாறாகத் திரைக்கதை அமைத்திருக்கிறார் இயக்குநர் ஆர்.மாதேஷ். ஆனால் தமிழ் ரசிகர்களுக்கு ஏற்கனவே பழகி, அலுத்துப் போன பேய், மாந்திரீகம், காமெடி, காதல் என அதே பழைய கிண்ணத்தில் புதிய சட்னி.

      சத்தியமா நாங்க லண்டன்ல தான் ஷூட் பண்ணியிருக்கோம் என ரசிகர்களை நம்ப வைப்பதற்காக அடிக்கடி டாப் ஆங்கிளில் சுற்றிக் காட்டுகிறார் ஒளிப்பதிவாளர் குருதேவ்.