twitter
    Tamil»Movies»Monster»Critics Review

    விமர்சகர்கள் கருத்து

    • ஒரு எலியை மைய கதாபாத்திரமாக வைத்துக்கொண்டு, அதையொட்டி ஒரு நல்ல கதையை பின்னி, அதற்கு ஏற்றார் போல் கதாபாத்திரங்களை வடிவமைத்திருக்கிறார் இயக்குனர் நெல்சன். இதனால் படத்தின் மீது நம்பகத்தன்மை உருவாகிறது. லாஜிக் மீறல்கள் இருந்தாலும், குழந்தைகள் ரசித்து பார்க்கும் வகையில் படத்தை தந்திருக்கிறார் இயக்குனர்.

      எலி சம்மந்தப்பட்ட காட்சிகள் மிகவும் தத்ரூபமாக இருக்கிறது. இதற்கு முக்கியமான காரணம் கிராபிக்ஸ் அதிகம் இல்லாமல், நிஜமான எலியை வைத்து எடுத்திருப்பது. ஒரு எலியை வைத்துக்கூட நல்ல படத்தை தர முடியும் என நிரூபித்திருக்கிறார் நெல்சன். இவரை விட்டால் வேறு யாராலும் எலி அளவுக்கு இறங்கி நடிக்க முடியாது. ஆமாங்க தமிழ் சினிமா ஜிம் கேரி எஸ்.ஜே.சூர்யாவை தவிர வேறு யாராலும் இந்த கதாபாத்திரத்தை இவ்வளவு அருமையாக செய்திருக்க முடியாது. எஸ்.சூர்யாவின் நடிப்பு வாழ்க்கையில் மான்ஸ்டர் ஒரு முக்கியமான படம்.