twitter
    Tamil»Movies»Mosadi»Critics Review

    விமர்சகர்கள் கருத்து

    • முதிர்ச்சி இல்லாத நடிகர்களின் நடிப்பு, படத்தை போரடிக்க வைக்கிறது. அதுவும் அவர்கள் பேசும் தமிழ், வேற்று மாநிலத்தவர்கள் பேசுவது போலவே காதில் விழுகிறது. டப்பிங்கிலாவது அதனை சரி செய்திருக்கலாம்.

      நாயகன் விஜு, நாயகி பல்லவி டோரா உள்பட படத்தில் நடித்த அனைவருமே புதுமுகங்கள். அதனால் நடிப்பு பயிற்சி போதவில்லை. எல்லாக் காட்சிக்கும் ஒரே ரியாக்ஷன் தான்.

      ஷாஜகானின் இசையில் ஒரு குத்து பாட்டு மட்டும் தாளம் போட வைக்கிறது. மணிகண்டனின் ஒளிப்பதிவு படத்தை ஓரளவுக்கு காப்பாற்றுகிறது. கோபிநாத்தின் எடிட்டிங்கில் குறை எதும் இல்லை.

      பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு எதிரான படமாக முதலில் செல்கிறது மோசடி. ஆனால் கடைசியில் பணமதிப்பிழப்பு நடவடிக்கையை ஆதரித்துவிடுகிறது படம். ரூபாய் தாள்களை ஒழித்து, இ-கரன்சியை நாடு முழுவதும் கொண்டு வந்தால் மட்டுமே ஊழலை ஒழிக்க முடியும் என்கிறது மோசடி.

      குறைந்த பட்ஜெட்டில் நல்ல கருத்துள்ள படத்தை தர நினைத்திருக்கிறார் இயக்குனர் ஜெகதீசன். நல்ல நடிகர்களை வைத்து அதனை செய்திருந்தால், 'மோசடி' மோசம் செய்திருக்காது.