twitter
    Tamil»Movies»Mr. Chandramouli»Critics Review

    விமர்சகர்கள் கருத்து

    • தனது முந்தைய மூன்று படங்களிலும் விஷாலை இயக்கிய திரு, இப்படத்தில் முதன்முறையாக கவுதம் கார்த்திக்கை நாயகனாக்கியிருக்கிறார். ஆனால், பல இடங்களில் சந்திரமௌலி, விஷாலின் நான் சிகப்பு மனிதனை ஞாபகப்படுத்துகிறான் என்பது மறுக்க முடியாது. சராசரியாகச் சென்று கொண்டிருக்கும் நாயகன் வாழ்க்கை, திடீரென ஒரு சம்பவத்தால் மாறுவது, உடல்நலக் குறைபாட்டால் நாயகன் பாதிக்கப்படுவது, எதிரியை கொஞ்சம் கொஞ்சமாக நெருங்குவது, எதிர்பார்க்காத நொடியில் வில்லனின் வேறுமுகம் என அதே நான் சிகப்பு மனிதன் பார்முலா தான் சந்திரமௌலியிலும்.

      தமிழ்த் திரையுலகம் காலம் காலமாக கையாண்டு வரும் "பார்முலா" ஹீரோயினாக வருகிறார் ரெஜினா. இரண்டு பாடல்களில் கவர்ச்சி விருந்து, அது தவிர படம் முழுவதும் நாயகனுடன் வருவது என ரெஜினாவிற்கு படத்தில் பெரிய வேலையில்லை. அதனால், படத்தின் நாயகி ரெஜினாவை விட, சில காட்சிகளில் மட்டுமே வந்தாலும் வரலட்சுமியின் நடிப்பு கவர்கிறது. கார்த்திக்கும், அவரும் வரும் காட்சிகள் கண்களுக்கு விருந்தாகின்றன. கடைசி வரை இருவருக்கும் இடையில் உள்ள உறவு காதலா, நட்பா என்பதை விரிவாகச் சொல்லாமல் விட்டது இயக்குநரின் சாமர்த்தியம்.