twitter
    Tamil»Movies»Mr. Local»Critics Review

    விமர்சகர்கள் கருத்து

    • பணக்கார திமிர்ப்பிடித்த பெண் - மிடில் கிளாஸ் பையன் காதலை மையமாக வைத்து, ஈரமான ரோஜாவே, மன்னன், சிங்காரவேலன், எங்கிட்ட மோதாதே, அம்மன் கோயில் கிழக்காலே உள்பட நிறைய சூப்பர் ஹிட் படங்கள் தமிழில் வந்திருக்கின்றன. வந்துகொண்டும் தான் இருக்கின்றன. ஆனால் மேலே குறிப்பிட்ட படங்களில் உணர்வுப்பூர்வமான கதையும், காட்சிகளும் இருக்கும். இதில் அப்படி எந்த காட்சியும் இல்லாதது படத்தின் மிகப்பெரிய மைனஸ். இதனாலேயே படத்துடன் ரசிகர்களால் ஒட்ட முடியவில்லை.

      "அடுத்து சண்டை வரப்போகுது, இப்போ பாட்டு வரப்போகுது பாரேன்" என சிறுவர்கள் கூட எளிதாக ஊகிக்கும் திரைக்கதை படத்தின் மிகப்பெரிய தோல்வி. எம்.ராஜேஷ் படம் பார்த்து விட்டு வயிறு வலிக்கச் சிரித்து விட்டு வரலாம் என நம்பி செல்பவர்கள், இந்தப் படத்துக்கு இவ்வளவு காசு கொடுத்து டிக்கெட் எடுத்து விட்டோமே என வயிற்றெரிச்சல் படும் அளவிற்கு இருக்கிறது படம்.

      படத்தில் பெரும்பாலான கதாபாத்திரங்கள் காமெடிக்கு பேர் போனவர்கள். ஆனால், படம் காமெடியே இல்லாமல் அக்னி நட்சத்திர தமிழ்நாடு மாதிரி வறட்சியாக மண்டையைக் காய வைக்கிறது. யோகி பாபு ஒரு காட்சியில் சிவகார்த்திக்கேயனிடம் சொல்வார், 'இந்த மேட்ச் முடியறதுக்குள்ள நீ சிரிக்கற மாதிரி ஒரு காமெடி சொல்றேன் பாரு' என. நம் மைண்ட் வாய்ஸும் இதே போல் தான் படம் முடிவதற்குள் மற்றவர்களிடம் சொல்லிச் சிரிக்கும்படி ஒரு காமெடிக் காட்சியாவது வந்துவிடாதா என ஏங்க வைக்கிறது.

      அப்போது எதிர்பாராதவிதமாக இவர்களை காரில் இடித்து விடுகிறார் நயன்தாரா, இவர் சிவா பார்க்க வந்த நடிகையின் சீரியல் தயாரிப்பாளர் ஆவார், அந்த நொடியில் இருந்து இருவர்களுக்குமே மோதல் தொடங்கியது. லோக்கல்களை கண்டாலே பிடிக்காத நயன்தாராவை நடுத்தர குடும்பத்தை சேர்ந்த இவர், எவ்வாறு காதலில் விழவைக்கிறார் என்பதே படத்தின் கதை.

      விமர்சனம் விரைவில்.....
      படத்தை பற்றிய முழு தகவல்களுக்கு: https://tamil.filmibeat.com/movies/mr-local.html