twitter
    Tamil»Movies»Naachiyaar»Critics Review

    விமர்சகர்கள் கருத்து

    • ஜோதிகாவுக்கு நேர்மையும் மனிதாபிமானமும் துணிச்சலும் நிறைந்த ஐபிஎஸ் அதிகாரி வேடம். அவர் 'பிய்த்து உதறியிருக்கிறார்' என்றெல்லாம் சொல்வது 'சிவாஜிக்கு நன்றாக நடிக்கத் தெரியும்' என்பதைப் போல வழக்கமான க்ளீஷே. சுருக்கமாக, மறுவரவில் ஜோதிகாவின் பெயர் சொல்லும் வேடம் இந்த நாச்சியார். ஜிவி பிரகாஷுக்கு நியாயமாக இதுதான் முதல் படம். அவர் இனி அப்படித்தான் சொல்லிக் கொள்ள வேண்டும். காத்து பாத்திரமாகவே மாறியிருக்கிறார். இனி த்ரிஷா இல்லனா நயன்தாரா வர்ஜின் பாய் மாதிரி வேடங்கள் செய்தால் அவரைத் தேடி வந்து அடிப்பார்கள் ரசிகர்கள். அந்த அளவுக்கு முற்றிலும் வேறு ஜிவி பிரகாஷ். நல்ல முயற்சி, மாற்றம். அதைச் செய்ய பாலாவால்தான் முடியும்.

      ஈஸ்வரின் ஒளிப்பதிவில் சென்னையின் மறுபக்கம், சட்ட - காவல் துறையின் இயல்புத் தன்மை கச்சிதமாக படமாக்கப்பட்டுள்ளது. சதீஷ் சூர்யா எடிட்டிங்கில் இன்னும் சில காட்சிகளுக்கு பாலாவுடன் போராடி கத்தரி போட்டிருக்கலாம். ஆனால் ஒரு இடைவெளிக்குப் பிறகு பாலாவிடமிருந்து ஒரு பாஸிடிவ் க்ளைமாக்ஸ் படம் என்பதே பெரிய ஆறுதல்தான். ஆனால் இன்னும் எதிர்ப்பார்த்தோம் என்பதையும் மறுப்பதற்கில்லை.