விமர்சகர்கள் கருத்து

    • சமீப நாட்களில் சறுக்கல் நாயகனாக மாறிக் கொண்டிருந்த விஜய் சேதுபதியைத் தாங்கிப் பிடிக்க வந்திருக்கிற படம் இந்த நானும் ரவுடிதான்.

      ஆரம்பம் முதல் இறுதிக் காட்சி வரை கலகலப்பும் விறுவிறுப்பும் கலந்து கட்டி கபடி ஆடுகின்றன.

      படம் முழுக்க நயன்தாரா ராஜ்ஜியம்தான். அதகளப்படுத்தியிருக்கிறார். ஏன், அத்தனை இயக்குநர்களின் முதல் சாய்ஸாக நயன்தாரா இருக்கிறார் என்பதற்கு இந்தப் படத்தில் விடை இருக்கிறது. தன்னை முத்தமிட விஜய் சேதுபதிக்கு அவர் போடும் நிபந்தனை, காது கேட்காத அவர், ஒவ்வொரு வார்த்தை உச்சரிப்பையும் உள்வாங்கும் விதம் எல்லாமே பிரமாதம். இந்தப் படத்தில் அவர் சொந்தக் குரலில் பேசியிருக்கிறார். இத்தனை நாள் கேட்ட இரவல் குரல்களை விட நன்றாக இருக்கிறது. தொடரட்டும்.

      கதைப் பிடிப்பதை விட, சுவாரஸ்யமாகச் சொல்லத் தெரிய வேண்டும். தனது இரண்டாவது படத்தில் அதைத் தெரிந்து வென்றிருக்கிறார் இயக்குநர் விக்னேஷ் சிவன்.