விமர்சகர்கள் கருத்து

    • தேசிய விளையாட்டாகவே இருந்தாலும், இந்தியாவில் ஹாக்கி விளையாட்டு எந்த நிலையில் இருக்கிறது என்பதை அழுத்தமாக பதிவு செய்திருக்கிறது படம். அதேபோல், முழுக்க முழுக்க இளைஞர்களுக்கான படமாக இருந்தாலும், சிகரெட், சரக்கு, ஆபாச காட்சிகள், இரட்டை அர்த்த வசனங்கள் என எதுவும் இல்லாமல், படத்தை கண்ணியமாக எடுத்ததற்காக இயக்குனர் பார்த்திபனுக்கும், ஆதிக்கும் வாழ்த்துக்கள்.

      பொதுவாக விளையாட்டை மையப்படுத்திய படங்கள் எல்லாமே ஒரு டெம்ப்லேட்டுக்குள் அடங்கிவிடும். நட்பே துணையும் அதற்கு விதிவிலக்கல்ல. ஏற்கனவே வெற்றி பெற்ற பல விளையாட்டு படங்களை தான் இந்த படம் நினைவூட்டுகிறது. ஆனால் இதில் கையாளப்பட்டுள்ள நட்பு எனும் உணர்வு, இளைஞர்களை சுண்டி இழுக்கும் காந்த சக்தி கொண்டது.

      ஆனால் இசையில் பின்னியெடுத்திருக்கிறார். குறிப்பாக, கடைசி அரை மணி நேரம் வரும் ஹாக்கி போட்டியில், ஆதியின் இசை தான் பார்வையாளரின் ஹார்ட்பீட்டை ஏற்றுகிறது. இளமை துள்ளலுடன் ஒலிக்கும் 'சிங்கிள் பசங்க' பாடல் ஆட்டம்போட வைக்கிறது.