twitter

    விமர்சகர்கள் கருத்து

    • இன்று போய் நாளை வா தொடங்கி தமிழ் சினிமாவில் இந்த கதையை வைத்து நிறைய படங்கள் வந்துவிட்டன. இதனால் இதில் புதிய விஷயங்கள் எதுவும் இல்லை. இருப்பினும், ஒரு எளிமையான கதையை எடுத்துக்கொண்டு, அதனை ஜாலியாக சொல்லியிருக்கிறார் இயக்குனர் சிவா அரவிந்த். மூன்று நண்பர்களின் பாத்திரப் படைப்பும், அதில் நடித்திருக்கும் நடிகர்களுக்கு கச்சிதமாக பொருந்துகிறது.

      சின்னத்திரையில் கலக்கிக்கொண்டிருக்கும் கவின், நல்ல கதாபாத்திரத்தின் மூலம் வெள்ளித்திரையில் அறிமுகமாகி இருக்கிறார். ஓரளவுக்கு நடிக்கவும் செய்திருக்கிறார். இரண்டாம் நாயகன் ராஜூ சஸ்ப்ரைஸ் அறிமுகம். அழுதே காமெடி செய்கிறார். தான் ஒரு பன்முக திறமையாளன் என்பதை மீண்டும் நிரூபித்திருக்கிறார் அருண்ராஜா காமராஜ்.

      விஜய் சேதுபதி போன்ற பெரிய நாயகர்களுடன் நடித்துக் கொண்டிருக்கும் ரம்யா நம்பீசன், புதுமுக நாயகனுடன் அதே அளவுக்கு ரொமான்ஸ் செய்வது ஆச்சரியமான விஷயம். அந்த வகையில் படத்தில் உண்மையான பலம் ரம்யா தான்.

      பத்தாம் வகுப்பினை கூட முடிக்காமல் வேலையின்றி ஊர் சுற்றி வரும் இவர்கள், வாழ்வில் சுயமாக ஒரு தொழில் தொடங்க முடிவு செய்கிறார்கள். திருமணத்திற்கு தேவையான அணைத்தையும் தயார் செய்து கொடுத்து திருமண நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் பணியை தொடங்குகிறார்கள்.

      இந்நிலையில், ரம்யா நம்பீசனை பார்க்கும் ராஜூவுக்கு காதல் மலர்கிறது, பின்னர் அடிக்கடி ரம்யாவை பார்க்க செல்கிறார். ஒரு நாள் ராஜூ தனது நண்பர்களை கூட்டிச் சென்று ரம்யா நம்பீசனை காண்பித்து இவரை காதலிக்க போவதாக கூறுகிறார். ரம்யாவை பார்த்ததும் இருவருக்குமே பிடித்துப் போகிறது. அப்போது அருண்ராஜா காமராஜ் கவினை உசுப்பேற்றிவிட தீடிரென கவின் ரம்யாவிடம் சென்று காதலிப்பதாக கூறுகிறார். ரம்யாவும் அவர் காதலை எவ்வீத எதிர்ப்பும் இன்றி சம்மதிக்கிறார்.

      பின்னர் கவின் ரம்யாவின் காதல் ராஜுவிற்கு தெரியவருகிறது. இருவரும் சண்டைபோட்டு பிரிகின்றனர். அருண் ராஜா காமராஜ் ராஜுவின் பக்கம் சென்றுவிட, கவின் தனிமரமாக நிற்கிறார்.

      இறுதியில் பிரிந்த நண்பர்கள் இணைந்தார்களா? கவின் - ரம்யா நம்பீசன் காதல் என்ன ஆனது? அதன் பின்னணியில் நடப்பது என்ன என்பதே படத்தின் மீதிக்கதை.

      விமர்சனம் விரைவில்.....
      படத்தை பற்றிய முழு தகவல்களுக்கு: https://tamil.filmibeat.com/movies/natpuna-ennanu-theriyuma.html