twitter
    Tamil»Movies»Nedunalvadai»Critics Review

    விமர்சகர்கள் கருத்து

    • தமிழ் இலக்கியத்தின் முக்கிய நூல்களுள் ஒன்று, பிரிவைப் பற்றி பேசும் நெடுநல்வாடை. மிக பொருத்தமான இந்த தமிழ் சொல்லை, தன் படத்தலைப்பாக தேர்வு செய்த இயக்குனருக்கு முதலில் பாராட்டுகள். சொல்ல வந்ததை தெளிவாக சொல்லி இருக்கிறார் செல்வகண்ணன்.

      தமிழ் சினிமாவில் பெரும்பாலான படங்கள் குடும்ப உறவுகளை பற்றியும், பாசத்தை பற்றியும், காதலை மையமாக வைத்தும் உருவாக்கப்பட்டவை தான். ஆனால் நெடுநல்வாடை இவற்றில் இருந்து தனித்துவமாக நிற்கிறது. காரணம் இப்படம் சொல்லும், உறவின் வலியும், காதலும், பாசமும், நேசமும், தியாகமும், நம் வாழ்வின் ஏதோ ஒரு கட்டத்தில் நாம் சந்திருத்திருக்கக் கூடிய ஒன்று. அந்த வகையில் நம்முடன் எளிதில் ஒட்டிக்கொள்கிறது இந்த நெடுநல்வாடை.

      ஆனால் 90 எம்எல் போதையில் தள்ளாடிக்கொண்டிருக்கும் தமிழ் சினிமாவை தெளிய வைக்க, நெடுநல்வாடை போன்ற படங்கள் மிகவும் அவசியமானவை. மண்ணும், மண் மனம் சார்ந்த பதிவுகளும் தான், காலம் கடந்து நிற்கக் கூடியவை. அந்த வகையில், இந்த நெடுநல்வாடை, தவிர்க்கக் கூடாத சினிமா.