விமர்சகர்கள் கருத்து

    • கனா போன்ற ஒரு படத்தை எடுத்த சிவகார்த்திகேயன், இது மாதிரியான புதிய முயற்சிகளுக்கு கைக்கொடுத்திருப்பதற்கு பாராட்டுகள். ஆனால் இது போன்ற விஷப்பரீட்சைகளை இனி செய்யாதீர்கள் சிவா.

      டைமிங் காமெடி, கவுண்டர் பஞ்ச் டயலாக் என ரவுசு செய்கிறார் ரியோ. படத்தின் கதாநாயகன் வேடத்துக்கு இயல்பாக பொருந்துகிறார். ஆனால் காமெடியை தவிர தனக்கு வேறொன்றும் வராது என சத்தியம் செய்யாதக் குறையாக அடம்பிடிக்கிறார்.

      நிறைய ஸ்பேஸ் இருந்தும், குறைவாகவே காமெடி செய்திருக்கிறார் விக்னேஷ்காந்த். இன்னும் கூடுதலாக சிரிக்க வைத்திருந்தால், நிறைய நிறைய ரசித்திருக்கலாம். எந்த காட்சியையும் சீரியசாக்காமல், போரடிக்காமல் பார்த்துக் கொண்டிருக்கிறார்.